/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சன்னி டைமண்ட்ஸ் வைர நகை கண்காட்சி
/
சன்னி டைமண்ட்ஸ் வைர நகை கண்காட்சி
ADDED : செப் 28, 2025 08:14 AM

திருப்பூர் : கோவை சன்னி டைமண்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டு நாள் வைர நகை கண்காட்சி திருப்பூரில் நேற்று துவங்கியது. இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கோவை சன்னி டைமண்ட்ஸ் நிறுவனம் சார்பில், தி பிரைடல் பிரில்லியன்ஸ் எக்சிபிஷன் என்ற தலைப்பில் பிரத்யேக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று திருப்பூரில், வேலம்பாளையம் ரோடு பார்ச்சூன் ஓட்டலில் துவங்கியது. கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் ரமா ராஜேஷ், வைஷ்ணவி விக்னேஷ், கவிதா ஜெனார்தனன், கிருத்திகா தங்கராஜ், மோனிஷா செல்வக்குமார், ஹர்ஷினி ரமேஷ், பூங்கொடி மற்றும் நிறுவன இயக்குனர் பிரேம் சன்னி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில், அழகிய திருமண நகைகள் முதல் தினமும் பயன்படுத்தும் லைட் வெயிட் நகைகள் வரை, உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வைர நகைகள் இடம் பெற்றுள்ளன.
தனித்துவமான வடிவமைப்புகளும், சன்னி டைமண்ட்ஸின் தரச்சான்றும் இக்கண்காட்சியின் சிறப்புகள். சன்னி டைமண்ட்ஸ் நிறுவனம், இண்டர்நெலி பிளானஸ் வைரங்களுக்கு பிரபலமானது.
நுாறு சதவீதம் இயற்கை வைரங்கள்; உயர் தரம்; நம்பிக்கையான சேவை ஆகியவற்றின் அடிப்படையில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் முன்னணி வைர நகை பிராண்டாக உள்ளது. இக்கண்காட்சி மற்றும் விற்பனை இன்றுடன் நிறைவடைகிறது. காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.