/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா
/
ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா
ADDED : செப் 19, 2025 07:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக ஐந்து ரயில்கள் செல்கின்றன. இதனால், தினமும் ஏராளமான பயணியர் ரயில்களில் செல்ல இங்கு வருகின்றனர்.
பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.