n ஆன்மிகம் n
பிறந்த நாள் விழா
ஸ்ரீ சத்ய சாய்பாபா, 99 வது பிறந்த நாள் கொண்டாட்டம், ஸ்ரீ சத்ய சாய் ஆன்மீக மையம், பி.என்., ரோடு, திருப்பூர். சுப்ரபாதம், நாம சங்கீர்த்தனம் - அதிகாலை 5:00 மணி. கணபதி ேஹாமம் - அதிகாலை 5:15 மணி. கொடியேற்றம் - 7:30 மணி. சாய் பஜன் - 8:00 மணி. சிறப்பு நாராயண சேவை - 11:00 மணி. 1008 சகஸ்ர நாம பாராயண நிகழ்ச்சி - மாலை 4:15 மணி. ஸ்வாதி கல்யாண ஜானகிராமன் பங்கேற்கும், சிறப்பு சொற்பொழிவு - மாலை 6:00 மணி. ஊஞ்சல் உற்சவம் - இரவு 7:00 மணி. அன்னதானம் - இரவு 7:30 மணி.
பைரவாஷ்டமி பூஜை
ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். விக்னேஸ்வர பூஜை, அஷ்ட பைரவ கலசஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபனம் - காலை 7:00 மணி. மஹா யாகம், மஹா பூர்ணாகுதி - காலை 9:00 மணி. 16 வகை திரவியங்களால் மகா அபிேஷகம், கலச தீர்த்தம், 108 வலம்புரி சங்காபிேஷகம் அலங்காரம் - காலை 11:00 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:00 மணி.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். மகா யாகம் - மாலை 5:00 மணி. சங்காபிேஷகம் - 5:30 மணி. அலங்கார பூஜை - மாலை 6:00 மணி.
n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. மகா கணபதி பூஜை - காலை 6:00 மணி. லட்சார்ச்சனை ஆரம்பம் - 7:00 மணி. யாக வேள்வி - மாலை 5:00 மணி. மகா அபிேஷகம் - இரவு 7:00 மணி. பைரவர் திருவீதி உலா - இரவு 7:30 மணி. அன்னதானம் - 8:00 மணி.
சிறப்பு பூஜை
ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம் பக்தி இன்னிசை குழு நடத்தும் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி.
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். மஹா கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. பறையெடுப்பு - காலை 7:00 மணி. நவகலச அபிேஷகம் - காலை 10:00 மணி. உற்சவ பலி பூஜை - 10:30 மணி. பறையெடுப்பு - இரவு 7:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ அபிராமி உடனமர் அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.
n ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவில், சேவூர், அவிநாசி. மாலை 6:00 மணி.
n பொது n
கிராம சபை கூட்டம்
சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், கருவலுார். காலை 11:00 மணி.
குடியேறும் போராட்டம்
தெருநாய்களிடம் இருந்து பொதுமக்கள், கால்நடைகளை பாதுகாக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம். காலை 11:00 மணி.
மாநில பொதுக்குழு
ஸ்ரீனிவாசா திருமண மஹால், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: எஸ்.டி.பி.ஐ., கட்சி. கொடியேற்றம் - காலை 10:00 மணி. கூட்டம் துவக்கம் - 11:00 மணி.
இலவச கண் சிகிச்சை முகாம்
சுலோச்சனா மெடிக்கல்ஸ் சர்வீசஸ் வளாகம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை. காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கடன் சிறப்பு முகாம்
வீட்டு வசதி கடன் சிறப்பு முகாம், ஹரிணி சென்டர் முதல்தளம், நேரு வீதி, காதர்பேட்டை சந்திப்பு, திருப்பூர். ஏற்பாடு: ரெப்கோ வங்கி, ரெப்கோ ேஹாம் பைனான்ஸ். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
பயிற்சி முகாம்
புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி முகாம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், கலெக்டர் அலுவலகம் அருகில், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன். காலை 10:30 மணி.
கலை நிகழ்ச்சி
'ஜோஷர்ட்ஸ் கல்சுரல் 2024' கலை நிகழ்ச்சி, போட்டிகள், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, காங்கயம் ரோடு, திருப்பூர்.
சிறப்பு முகாம்
ஆதார் சிறப்பு முகாம், லயன்ஸ் சங்க கட்டடம், டவுன்ஹால் ஸ்டாப், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தபால்துறை. காலை 10:00 மணி.
n விளையாட்டு n
வாலிபால் போட்டி
நிட்சிட்டி வாலிபால் கோப்பைக்கான, பள்ளி அணிகளுக்கான வாலிபால் போட்டி, டிசெட் மைதானம், பூலுவப்பட்டி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜூகேஷனல் டிரஸ்ட். காலை 9:00 மணி.