n ஆன்மிகம் n
குரு பூஜை விழா
திருநீலகண்ட நாயனார் குரு பூஜை விழா, குலாலர் திருமண மண்டபம், மேற்குரத வீதி, அவிநாசி. விநாயகர் வழிபாடு - காலை 6:00 மணி. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் அபிேஷகம் - 7:00 மணி. ரிஷப வாகனத்தில் அம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசேகரர் திருநீலகண்ட நாயனாருடன் திருவீதி உலா - 9:00 மணி. அடியாருக்கு அமுது படைத்து பூஜை - மதியம் 12:00 மணி. அன்னதானம் - 1:00 மணி. மஞ்சள் நீராட்டு - மாலை 4:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். விஸ்வேஸ்வர சாமி கோவிலில் திருவோடு வழங்கி, திருநீலகண்ட நாயனார் ரத்தினாசலஅம்மையாளர் அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி. திருக்கைலாய வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா - காலை 9:00 மணி. மாகாளியம்மன் கோவிலில் திருஅமுது வழங்குதல், அன்னதானம் - காலை 11:00 மணி.
n பொது n
கண்காணிப்பு குழு
கூட்டம்
மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம். மாலை 3:00 மணி.
புத்தக திருவிழா
துவக்கம்
21வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். பங்கேற்பு: எம்.பி.,சுப்பராயன், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார். புத்தக கண்காட்சி துவக்க விழா - மாலை 5:00 மணி.
பயிற்சி முகாம்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி. ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

