sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : செப் 27, 2024 11:25 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர். மகா அபிேஷகம், திருமஞ்சனம் - அதிகாலை 5:00 மணி. கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - இரவு 7:30 மணி. அச்சம்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் பஜனை குழு இசைக்கச்சேரி - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. அவிநாசி அபிநயம் அகாடமி பரதநாட்டிய நிகழ்ச்சி - இரவு 7:00 முதல், 9:00 மணி வரை.

l ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, தீபாராதனை - காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை. அன்னதானம் - மதியம் 1:00 முதல், 2:00 மணி வரை.

l விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய் மற்றும் பெருந்தொழுவு. விசேஷ அபிேஷகம், அலங்காரம், காலை, 7:00 மணி.

l ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். பெருமாளுக்கு விசேஷ அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 10:00 மணி. ஏகாதசி ஊஞ்சல் உற்சவம் - காலை 7:00 மணி.

l புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பஜனை, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி -மாலை 6:30 மணி.

l ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு பூஜை - அதிகாலை 5:30 மணி. திருவீதி உலா - 7:00 மணி. பிரசாதம் வழங்குதல் - காலை 9:00 மணி.

l கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார். திருமஞ்சன அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி. அலங்கார பூஜை, தீபாராதனை - 5:30 மணி. பிரசாதம் வழங்குவதல் -மாலை 6:30 மணி. சுவாமி திருவீதி உலா - மதியம் 12:00 மணி.

l காரணப்பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், வேட்டுப்பாளையம். சிறப்பு பூஜை - காலை 9:00 மணி.

l திருப்பூர், திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அலங்கார பூஜை - காலை 6:00 மணி.

l சுயம்பு காரணப்பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். திருமஞ்சனம், அபிேஷகம், அலங்கார பூஜை - அதிகாலை 5:00 மணி.

l ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சேமலைக்கவுண்டம்பாளையம், அலகுமலை. அபிேஷகம், அன்னதானம் - இரவு 7:00 மணி.

n பொது n

வேலைவாய்ப்பு முகாம்

காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் வளாகம், பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரி, அரச்சலுார், காங்கயம். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். காலை 8:00 மணி முதல்.

கருத்தரங்கம்

'ஆயத்த ஆடை தொழிலுக்கான ஏற்றுமதி நிதி மற்றும் வர்த்தக வசதி' எனும் தலைப்பில் கருத்தரங்கம், பாப்பீஸ் ஓட்டல், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: ஆயத்த ஆடை ஏற்று மதி மேம்பாட்டு கவுன்சில். காலை 11:00 மணி.

மகாசபை கூட்டம்

36வது மகாசபை கூட்டம், சங்க அலுவலகம், திருப்பூர். ஏற்பாடு: சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கம். இரவு 7:00 மணி.

சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: ஜெய்வாபாய் பள்ளி. முகாம் துவக்க விழா - மாலை 4:00 மணி.

துவக்க விழா

கல்லுாரியின் மாணவியர் பேரவை துவக்க விழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பல்சுவை நிகழ்ச்சி

மாணவியரின் தனித்திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

n விளையாட்டு n

நீச்சல் பயிற்சிதுவக்க விழா

டிரிக் அகாடமி, 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் திருமுருகன்பூண்டி. பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். மாலை 4:00 மணி.






      Dinamalar
      Follow us