
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மண்டல கூட்டுறவு துறை இணை பதிவாளராகப் பணியாற்றிய சீனிவாசன், பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகிச் சென்றார். உதவி பதிவாளராக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து கோவை 'டியூகாஸ்' நிர்வாக இயக்குநர் பழனிசாமி இங்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தஞ்சை மண்டல இணை பதிவாளராக இருந்த பிரபு இங்கு மாறுதல் செய்யப்பட்டார். நேற்று அவர் திருப்பூர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

