ADDED : ஜூலை 30, 2025 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழ்ச்செம்மல் விருதுக்கு நடப்பாண்டுக்கு விண்ணப்பிக்க www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உரிய சான்றுகளுடன், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு, வரும் ஆகஸ்ட் 25க்குள் நேரிலோ, தபால் வாயிலாக விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். விருது பெறுவோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 0421 2971183 என்கிற எண்ணில் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.