/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ் கூடல் விழா போட்டி; மாணவர்களுக்கு சான்றிதழ்
/
தமிழ் கூடல் விழா போட்டி; மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஆக 17, 2025 09:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; ராமசந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் கூடல் விழா நடந்தது.
உடுமலை ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தமிழ் கூடல் விழாவிற்கு, தலைமையாசிரியர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ், 'தமிழின் தொன்மை, தமிழர்களின் சிறப்பு' குறித்து பேசினார்.
தொடர்ந்து, தமிழ் கூடல் விழாவையொட்டி நடந்த, கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பால்சாமி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். தமிழாசிரியர் மருதமுத்து நன்றி தெரிவித்தார்.