/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு பலகையில் தமிழ்
/
ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு பலகையில் தமிழ்
ADDED : ஆக 10, 2025 02:47 AM

திருப்பூர் : 'திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பை தமிழிலும் இடம் பெறச் செய்ய வேண்டும்' என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு, 'தினமலர்' செய்தி எதிரொலியால் அமல்படுத்தப்பட்டது.
'திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் டூவீலர் பார்சல் அலுவலகத்தில், விதிமுறை குறித்த அறிவிப்பு ஆங்கிலத்தில் இருந்தது. இதை புரிந்து கொள்வது கடினமாக இருப்பதால், விதிமுறைகளை தமிழிலிலும் மொழி பெயர்த்து, அச்சிட வேண்டும்' என பத்து ரூபாய் இயக்க திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் செல்லம், மத்திய ரயில்வே துறை அமைச்சகத்துக்கு, இ-மெயில் வாயிலாக மனு அனுப்பியிருந்தார்.
தெற்கு ரயில்வே கோட்ட தலைமையகம் அனுப்பிய விளக்கத்தில், ''இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்கிறோம். உரிய அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு, அறிவிப்பு பலகையில், பிராந்திய மொழி அச்சிடப்பட்டுள்ளது'' என விளக்கமளித்திருந்தனர்.இருப்பினும், ''தமிழ் மொழியில் விதிமுறைகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிலைய அதிகாரிகள் மேற்கொண்டதாக தெரியவில்லை'' என, நேற்று 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, ரயில்வே நிர்வாகத்தினர் தமிழில் அறிவிப்பு வைத்தனர்; ரயில்வே நிர்வாகத்தின் இந்த செயல், மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றது.