/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொட்டிக்கரி ஆலைக்கு அனுமதி கூடாது! கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
/
தொட்டிக்கரி ஆலைக்கு அனுமதி கூடாது! கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
தொட்டிக்கரி ஆலைக்கு அனுமதி கூடாது! கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
தொட்டிக்கரி ஆலைக்கு அனுமதி கூடாது! கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
ADDED : ஜன 20, 2025 11:37 PM

திருப்பூர்; தொட்டிக்கரி ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தாராபுரம் கிளாங்குண்டல் கிராம மக்கள், குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
படியூர் பகுதி மக்கள்:
படியூரில் 32 குடும்பங்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கடந்த 2016 ல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கூரை வீடு அமைத்து, வசிக்கிறோம். வீட்டுவரி போடப்பட்டுள்ளது; மின் இணைப்பும் பெற்றுள்ளோம். பட்டா வழங்கி எட்டு ஆண்டுகளாகியும் இன்னும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை. அதனால், அரசு திட்டங்களில் வங்கி கடன்கள் பெற்று, புதிய வீடு கட்ட முடியாமல் தவிக்கிறோம். ஆன்லைன் பட்டா பதிவு செய்து, அரசு திட்டங்களில் வீடு கட்டிக்கொடுக்கவேண்டும்.
கிளாங்குண்டல்கிராம மக்கள்:
தாராபுரம் தாலுகா, கிளாங்குண்டல் கிராமம், கனுவாரங்காட்டு தோட்டத்தில், தேங்காய் தொட்டிக்கரி ஆலை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமலேயே ஆலையை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தால், கால்நடைகளின் மேய்ச்சல் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் தொட்டிக்கரி ஆலைக்கு அனுமதி அளிக்க கூடாது.
பல்லடம் பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள்:
பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், கடந்த 2015 ல், எட்டு வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உரிமையாளர்களே தங்கள் ஆட்டோக்களை இயக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால்தற்போது, அந்த நிபந்தனைகள் மீறப்படுகின்றன. வெளிநபர்களை டிரைவராக நியமித்து, ஆட்டோக்களை இயக்குகின்றனர். வாழ்வாதாரத்துக்காக இடம்கேட்கும் வெளி ஆட்டோக்களுக்கு, ஸ்டாண்டில் இடம் கொடுக்க மறுக்கின்றனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., நடத்திய விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, பல்லடம் ஆட்டோ ஸ்டாண்ட் விவகாரத்தில், கலெக்டர் நேரடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பல்லடம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வராஜ்:
இச்சிப்பட்டி ஊராட்சியில், எட்டு குக்கிராமங்களில் உள்ள மயானங்கள், பராமரிப்பு இன்றி, பாழடைந்துள்ளன. சுற்றுச்சுவர் இல்லாததால், திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிவிட்டனர்.
சடலத்தை எரியூட்டும்போது சடங்குகள் செய்வதற்கு தண்ணீர் இல்லை; முட்புதர்கள் மண்டியுள்ளன. மயானங்களுக்கு சுற்றுச்சுவர் அமைத்தும், சாலை, மின் விளக்கு, தண்ணீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

