/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நஞ்சில்லா உணவு உற்பத்தி இலக்கு: இடுபொருட்களுக்கு அரசு உதவணும்
/
நஞ்சில்லா உணவு உற்பத்தி இலக்கு: இடுபொருட்களுக்கு அரசு உதவணும்
நஞ்சில்லா உணவு உற்பத்தி இலக்கு: இடுபொருட்களுக்கு அரசு உதவணும்
நஞ்சில்லா உணவு உற்பத்தி இலக்கு: இடுபொருட்களுக்கு அரசு உதவணும்
ADDED : செப் 26, 2025 09:30 PM
உடுமலை:
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், காய்கறி உற்பத்தியில், பாரம்பரிய இயற்கை வேளாண்மை முறைக்கு தற்போது மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
தேங்காய் மற்றும் காய்கறிகள், தானியங்கள் உட்பட உற்பத்திக்கான சாகுபடிகளில், ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை விவசாயிகள் தவிர்க்க துவங்கியுள்ளனர்.
மாறாக, மூலிகை பூச்சி விரட்டி, உயிர் உரங்கள் உட்பட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்து கின்றனர். இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கும், விளைபொருளுக்கு, சந்தைகளில் நல்ல வரவேற்பும் உள்ளது. ஆனால், இத்தகைய இயற்கை வேளாண் சாகுபடிக்கான இடுபொருட்கள் தேவையான போது கிடைக்காததால், மீண்டும், ரசாயன உரம், மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
தற்போது, தென்னை சாகுபடியில், வெள்ளை ஈ பரவல் மற்றும் வாடல் நோயை கட்டுப்படுத்த, வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்ப எண்ணெய் பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தரமான வேப்பம் புண்ணாக்கு, சந்தைகளில் கிடைப்பதில்லை. விவசாயிகள், தாராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்குச்சென்று, புண்ணாக்கை மற்றும் வேப்ப எண்ணைய் வாங்கி வருகின்றனர்.
சு ற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, 'நஞ்சில்லாத உணவு' என்ற இலக்கை எட்ட, அரசும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை வாயிலாக, இயற்கை வேளாண் இடுபொருட்களை, மானியத்தில், வழங்கவும், விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.