sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'

/

'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'

'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'

'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'


ADDED : செப் 08, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அ க்கா, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வரலாம்; ஒரு சின்ன வேலை,'' என மித்ரா அழைக்க, ''ஓகே., போலாமே'' என்றவாறே, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

''மண்டலங்களை கவனிக்கிற துணை தாசில்தார் 'சீட்'ல இருக்கறவங்களுக்கு 'கவனிப்பு' நிறைய வருமாம்,'' என ஆரம்பித்த மித்ரா, ''அதனால தான், வருஷத்துக்கு ஒரு தடவை 'டிரான்ஸ்பர்' போட்டுக்கிட்டே இருப்பாங்களாம். நம்ம ஊர்ல என்னடான்னா. ரெண்டு வருஷத்துக்கு மேலாகியும் கூட சிலரு அதே 'சீட்'ல நங்கூரம் போட்ட மாதிரி உட்கார்ந்து இருக்காங்க. சர்ச்சையில சிக்குன ஆபீசர்ஸ் கூட, அதே 'சீட்'ல தான் இருக்காங்கன்னா பார்த்துக்கோங்க,'' என்றாள்.

சித்ரா, 'டிரான்ஸ்பர்' போட வேண்டிய 'முருகப்பெருமான்' பேர் கொண்ட பெரிய ஆபீசர், இந்த விஷயத்துல, 'சைலன்டா' இருக்காராம். 'அவரோட ஆசி' இருக்கற வரைக்கும் நம்மளை யாரும் அசைக்க முடியாது'ன்னு, மண்டலத்தை கவனிக்கிற ஆபீசர்ஸ் இருக்காங்களாம்,'' என்றாள்.

''ஆசி வழங்கற ஆபீசருக்கு 'கவனிப்பு' பலமா இருக்கும் போல...'' என மித்ரா சிரிக்க, ''அதே மாதிரி, ஒவ்வொரு ஸ்கூல், லாரி சர்வீஸ், பிரைவேட் டிரான்ஸ்போர்ட்ல வேல பார்க்கிற டிரைவர், கண்டக்டர்களோட விவரங்களை, பதிவு பண்ணி 'சர்டிபிகேட்' வாங்கணும்ன்னு, தொழிலாளர் நலத்துறை ஆபிசர்ங்க 'சர்குலர்' அனுப்பியிருக்காங்க. சம்மந்தப்பட்ட ஸ்கூல், டிரான்ஸ்போர்ட் கம்பெனிக்காரங்க, கலெக்டர் ஆபீஸ் கேம்பஸ்ல, ஆறாவது மாடியில இருக்கற தொழிலாளர் நல உதவி கமிஷனர் ஆபீஸ்க்கு போய், ஆவணங்களை காண்பிச்சு பதிவு பண்றாங்களாம். இதுக்கு கமிஷனா, 10 ஆயிரம் ரூபா வேணும்ன்னு, அங்கிருக்கிற ஆபீசர் கேட்டு வாங்கி, வசூல் அள்றாங்களாம்,'' என்றாள்.

''அடக்கொடுமையே...'' என அங்கலாய்த்த மித்ரா, ''மேலிட உத்தரவில்லாமல் இவ்வளவு துணிச்சலா 'கலெக்ஷன்' பண்ணுவாங்களா?'' என சந்தேகம் கிளப்பினாள் சித்ரா.இருவரும் கலெக்டர் ஆபீஸ் வந்து சேர்ந்தனர்.

பார்க்க வேண்டிய ஆபீசர் வெளியில் சென்றிருப்பதாக அலுவலக ஊழியர் கூற, வெளியில் வந்து மர நிழலில் அமர்ந்தனர். அருகேயிருந்த டீக்கடையில் காபியும், மெதுவடையும் வாங்கி சாப்பிட்டனர்.

'ஆதாரில்' கொட்டும் பணம் ''ஆதார் விவகாரம் தொடர்பாக, சப்-கலெக்டர் அந்தஸ்தில் இருக்கற ஆபீசர் என்கொயரி பண்ணிட்டு இருக்காராமே...'' என்றாள் சித்ரா.

''புதிர் போடாம விஷயத்தை சொல்லுங்க அக்கா,'' என்றாள் மித்ரா.

''மித்து, அவிநாசியில தான் இந்த கூத்து. ஒரு லேடி, தன்னோட, 10 வயசு மாற்றுத்திறனாளி குழந்தைக்கு, ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, சேவூர் ரோட்டுல இருக்கற ஒரு இ-சேவை மையத்தில, 750 ரூபாய் வாங்கிட்டு, ரெண்டு நாளா அலைய விட்டிருக்காங்க. அப்படியும் ஆதார் அட்டை தரவே இல்லையாம். இத தெரிஞ்சுகிட்ட ஒரு அமைப்பை சேர்ந்தவங்க, ஆதார் இலவச முகாம் நடத்தியிருக்காங்க,''

''அதில் அந்த லேடி விண்ணப்பிக்க, பைசா செலவில்லாம ஆதார் அட்டை வாங்கிட்டு வந்திருக்காங்க. கொடுத்த பணத்தையாவது வாங்கலாம்ன்னு, அந்த இ-சேவை மையத்துக்கு போயிருக்காங்க. ஆனா, பணத்தை கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். இந்த விவகாரம் குறித்து சப்-கலெக்டர் அந்தஸ்துல இருக்கற ஆபீசர் விசாரிச்சுட்டு இருக்கறாராம். அங்கிருக்கிற பல சேவை மையங்கள், பணம் கறக்குற மையங்களாக மாறிட்டு வருதுன்னு, புகார் அதிகம் வருதாம்,''

''அங்க மட்டுமில்லீங்க்கா. எல்லா ஊரிலும் அதே கதைதான்,'' என்ற மித்ரா, ''நெருப்பெரிச்சல் கிராமத்துல இருக்கற ஒரு தனியார் மண்டபம், அரசு நிலத்தை ஆக்கிரமிச்சு கட்டியிருக்கிறதா ஒரு சர்ச்சை இருக்கு. அந்த மண்டபத்துல உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த ஏற்பாடு செஞ்சாங்களாம். ஏற்கனவே, சர்ச்சைக்குள்ள சிக்கியிருக்கற அந்த மண்டபத்துல முகாம் நடத்தறது சரியா இருக்காதுன்னு, ஒரு தரப்பு சொல்ல, வேற இடம் ஏற்பாடு பண்ணாங்களாம். இருந்தாலும், அதே மண்டபத்துல தான் முகாம் நடத்தணும்ன்னு, லோக்கல் கட்சி வி.ஐ.பி.,க்களுக்கு எங்கிருந்தோ ஒரு 'அழுத்தம்' வந்துள்ளதால், அதே மண்டபத்துலயே முகாம் நடத்த முடிவு பண்ணியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''எப்படியோ... மண்டபத்துக்கு ஒரு விளம்பரம் தேடிக்கிட்டாங்கன்னு சொல்லுங்க'' என்ற சித்ரா அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

அ.தி.மு.க.,வின் அந்தர் பல்டி ''அனுப்பட்டி வில்லேஜ்ல, பட்டா நிலத்துல குப்பைக்கொட்டுன லாரியை, பொதுமக்கள் பிடிச்சு கொடுத்தாங்கள்ல. ஆனா, போலீஸ்காரங்களும், ரெவின்யூ ஆபீசர்களும், ரொம்ப 'ஈஸியா' லாரியை விட்டுட்டாங்களாம். இதனால, பொதுமக்கள், 'அப்செட்' ஆகிட்டாங்களாம். அதுமட்டுமில்லாம, பல மாசமா நடக்கிற மணல் கொள்ளையை கூட, யாரும் கண்டுக்க மாட்டேங்கறாங்கன்னும் புலம்பறாங்களாம்...'' என்றாள் சித்ரா.

''அதேபோல, முதலிபாளையம் பாறைக்குழியில, கார்ப்பரேஷன்காரங்க குப்பை கொட்றதுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிச்ச விவகாரம் தொடர்பா, கலெக்டர் முன்னாடி பேச்சுவார்த்தை நடந்துச்சுல்ல. இதுநாள் வரைக்கும், குப்பை பிரச்னை தொடர்பாக, மாநகராட்சிக்கு எதிராக பேசிட்டு இருந்த எதிர்க்கட்சி கவுன்சிலர்ங்க அப்படியே 'பல்டி' அடிச்சுட்டாங்களாம்,''

''எதிர்க்கட்சி தலைவரு பேசறப்போ, 'குப்பை விவகாரத்துல நாங்க அரசியல் செய்யமாட்டோம்,' சொல்லியிருக்காருன்னா பார்த்துக்கோயேன். அதுமட்டுமில்லாம, 'குப்பை விவகாரத்துல மேயரும், எம்.எல்.ஏ.,வும் என்ன சொல்றாங்களோ, அதன்படி செயல்படுவோம்'ன்னு சொல்லிட்டாங்களாம். இதனால, மேயர் அப்படியே சந்தோஷத்துல 'ஷாக்' ஆயிட்டாராம்...'' என்றாள் மித்ரா.

''ஆனா, அடுத்த வருஷம் வரப்போற அசெம்பளி எலக் ஷனை குறிவச்சு அங்கங்க திண்ணை பிரசாரம் செய்துட்டு இருக்கற முன்னாள் அமைச்சர் குப்பை பிரச்னையை கிளறிக்கிட்டே இருக்காரே...'' என சந்தேகம் கிளப்பிய சித்ரா, ''பல்லடம் யூனியன்ல, ரெண்டு ஊராட்சி செயலர்களுக்கு 'டிரான்ஸ்பர்' போட்டு, அரசியல் அழுத்தம் காரணமா அந்த ஆர்டரை நிறுத்தி வச்சாங்கள்ல. இந்த குழப்பம் காரணமா, ரெண்டு பேரும் லீவுல இருக்கறதால, ஊராட்சிக்குள்ள குப்பை அள்ற வேலைக்கு 'பில்' பாஸ் பண்றது, அது, இதுன்னு நிறைய வேலைங்க 'பென்டிங்' இருக்காம்'' என்றாள்.

''எலக்ஷன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுங்க்கா. விலைவாசி, கூலிப்பிரச்னைன்னு, தோழர்கள் தான் முதல் ஆளாக ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்களாம். ஆனா, அமெரிக்கா வரி விதிப்பு சம்மந்தமான விவகாரத்துல, தி.மு.க., முந்திக்கிட்டாங்களாம். இதனால், தோழர்கள் 'அப்செட்' ஆகிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

'கிடா' விருந்து கலக்கல் ''விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நல்லபடியா நடந்து முடிஞ்சுதுல்ல. அதுக்காக, ஐ.எஸ்., போலீஸ்காரங்களுக்கு, அந்த பிரிவை கவனிக்கிற பெரிய ஆபீசர் அசைவ விருந்து வச்சு அசத்திட்டாராம். அதேமாதிரி காங்கயத்திலும், ஸ்டேஷன் சார்பில, கிடா வெட்டி, இலைக்கட்சிக்காரரின் ஓட்டல்ல தடபுடல் விருந்து கொடுத்திருக்காங்களாம்; அதுவும், 'சரக்கோட,'' என்றாள் சித்ரா.

''எல்லாம் சரிதான். ஆனா, 'போக்சோ' கேஸ் போடறதுக்கு சிட்டிக்குள்ள இருக்கற மகளிர் ஸ்டேஷன் போலீஸ்காரங்க தயங்கறாங்களாம்,'' என்ற மித்ரா, ''சிட்டிக்குள்ள இருக்கற மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பாலியல் புகார் அப்பப்போ வருதாம். புகாரை வாங்கற போலீஸ்காரங்க, 'இதுசம்மந்தமான விசாரணைக்கு அடிக்கடி வர வேண்டியிருக்கும், அப்படி, இப்படின்னு சொல்லி புகார் தர்ற பேரண்ட்ஸை பெற்றோரை ரொம்பவே பயமுறுத்தறாங்களாம். இதனால, விஷயம் வெளிய தெரிஞ்சுடுமோன்னு பயந்து, பலரும் புகார் கொடுக்க தயங்கறாங்களாம்,'' என விளக்கினாள்.

''மித்து, பல்லடம் சப்-டிவிஷன் ஆபீசர், எப்பவும் விரைப்பா தான் இருப்பாராம். யார் வந்தாலும் ஏன், சீனியர் சிட்டிசன்ஸ் வந்தாக்கூட நிக்க வச்சுத்தான் பேசுவாராம். கால்ல சுடுதண்ணிய ஊத்துன மாதிரி, எப்பவும் 'கடுகடு'ன்னு இருக்காருன்னு, சப்-டிவிஷன் போலீஸ் காரங்களே புலம்பறாங்களாம்'' என்ற சித்ரா, ''அந்த ஊர்ல குட்டி ஆபீசர் ஒருத்தரின் தோட்டத்தையொட்டி, வழி இருக்காம்,''

''இது சம்மந்தமா பக்கத்து தோட்டத்துக்காரரோட ஏதோ பிரச்னையாம். கோர்ட் உத்தர வின்படி வக்கீல்கள், கோர்ட் ஊழியருங்க, அந்த இடத்தை பார்க்க வந்திருக்காங்க. ஆனா, தோட்டத்துக்காரரு, போலீஸ் ஆபீசரோட தோட்டத்துல இருந்த வேலியை எடுத்து எறிஞ்சுட்டாராம். இத கேள்விபட்ட ஆபீசர், 'யாரை கேட்டு வேலியை எடுத்தீங்க'ன்னு சொல்லி, ரெண்டு பேரை அடிச்சிட்டாராம். வக்கீல் உட்பட கோர்ட் ஊழியர்கள் கிட்டயும் தகராறு செஞ்சிருக்காராம். டிபார்ட்மென்ட்ல இருக்கறவங்களே இப்படி நடந்துக்கிட்டா, நல்லாவா இருக்கும்ன்னு சொல்லி, ஏ.ஆருக்கு டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

'தடையில்லாம ஓடும் 'சரக்கு' ''போன வாரம், ஸ்டேட் லெவல் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி திருப்பூர்ல நடந்துச்சுல்ல. பரிசளிப்பு விழாவுல, சங்கத்தோட மாநில தலைவர் அன்புமணி வர்றதா இருந்துச்சு. ஆனா, அவரு வரலையாம். ஏற்கனவே, கட்சிக்குள்ள அப்பா, மகன் சண்டை நடந்துட்டு இருக்கறப்போ, அன்புமணி வந்தா, அவரை போய் பார்க்கிறதா, வேண்டாமாங்கற குழப்பத்துல கட்சிக்காரங்க இருந்தாங்களாம். அவர் வராததால, அப்பாடான்னு நிம்மதி பெருமூச்சு விட்டாங்களாம்,'' என்ற சித்ரா, ''அவிநாசி வட்டாரத்துல, 24 மணி நேரமும், 'சரக்கு' சங்கட மில்லா விக்கிறாங்களாம் தெரியுமா?'' என கேள்வி கேட்டாள்.

''அப்படியாக்கா...''

''அவிநாசி, அப்புறமா சேவூர் சுத்துவட்டாரத்திலுள்ள எல்லா 'டாஸ்மாக்' கடைகளில், 24 மணி நேரமும் 'சேவை' செய்றாங்க. குறிப்பா சொல்லோணும்னா, பஸ் ஸ்டாண்ட் பக்கம், மாட்டாஸ்பத்திரி, பவர்ஹவுஸ் கடைகளை, மூடுறதே யில்லையாம். அதிலும், பாட்டிலுக்கு 100 ரூபாய் அதிகம் வைத்து வித்தாலும், 'குடி'மகன்களும், வாங்கிட்டு போறாங்களாம்,''

''இத்தனைக்கும் பக்கத்துல தான் மதுவிலக்கு போலீஸ் ஆபீசும் இருக்குது. ஆனா, அவங்களும் கண்டுக்கறதில்ல. லோக்கல் போலீசும் கண்டுக்கிறதுல்ல. அதுக்குத்தான் மாசாமாசம், மாமூல் சரியாக கொடுக்கிறோம். அதுக்காகவே, 'டார்கெட்' வச்சு பாட்டில் விக்க வேண்டியிருக்குனு 'டாஸ்மாக்' ஊழியர்களே சொல்றாங்களாம்,'' என்ற சித்ரா, ''சரி வா மித்து. ஆபீசர் வந்திருப்பாரு. பார்த்துட்டு கெளம்பலாம்,'' என்று நடக்க ஆரம்பித்தாள்.






      Dinamalar
      Follow us