தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/‘டாஸ்மாக்’ முறைகேடு ஆவணங்கள் பறிமுதல்

‘டாஸ்மாக்’ முறைகேடு ஆவணங்கள் பறிமுதல்

‘டாஸ்மாக்’ முறைகேடு ஆவணங்கள் பறிமுதல்


ADDED : நவ 21, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ‘டாஸ்மாக்’ நிர்வாகத்தில் மது கொள்முதல், விற்பனை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் போக்குவரத்து ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் நேற்று (நவ.,20) ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூவில் சீனிவாசன் என்பவரின் வீடு, சிறுபூலுவபட்டியில் உள்ள போக்குவரத்து அலுவலகம், அவிநாசியில் பிருத்விராஜ் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் திருப்பூர், கோவை, சென்னையைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

2023, 2024-ம் ஆண்டுகளில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஒவ்வொரு பிரிவாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தக் காலகட்டத்தில் டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து மதுக்கடைகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்ல வாகனங்களை வாடகைக்கு ஒப்பந்தம் செய்திருந்த இரண்டு போக்குவரத்து உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், அவிநாசியில் 21 ஆவணங்கள் உட்பட மொத்தம் 35 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us