/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறை நிரப்பும் போராட்டம் ஆசிரியர்கள் முடிவு
/
சிறை நிரப்பும் போராட்டம் ஆசிரியர்கள் முடிவு
ADDED : ஆக 10, 2025 02:45 AM

அவிநாசி : அவிநாசி, மேற்கு ரத வீதி, தேவாங்க செட்டியார் திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மண்டல மாநாடு நடந்தது.
மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராபர்ட் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் கண்ணன், துணை தலைவர் ஞானசேகரன், துணை செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடந்த 2009ம் ஆண்டுக்கு பின், நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியம், அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்து, 15 ஆண்டுகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம், 8,370 என்றும், அதன்பின், நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 5,200 என்றும் ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒன்றாக இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் புறக்கணிக்கின்றனர்.
முரண்பாடை களைய வலியுறுத்தி, 15 ஆண்டுகளாக பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறோம். 2018ல் நடந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதியும் கொடுத்தார். ஆனால், இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப்., மாதம் ஒரு நாள் சிறைநிரப்பும் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

