sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.80 கோடியில் தொழில்நுட்ப மையம் அமைகிறது! சாய ஆலை மற்றும் பிரின்டிங் தொழில் மேம்படும்

/

ரூ.80 கோடியில் தொழில்நுட்ப மையம் அமைகிறது! சாய ஆலை மற்றும் பிரின்டிங் தொழில் மேம்படும்

ரூ.80 கோடியில் தொழில்நுட்ப மையம் அமைகிறது! சாய ஆலை மற்றும் பிரின்டிங் தொழில் மேம்படும்

ரூ.80 கோடியில் தொழில்நுட்ப மையம் அமைகிறது! சாய ஆலை மற்றும் பிரின்டிங் தொழில் மேம்படும்


ADDED : ஜூலை 06, 2025 03:20 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மத்திய அரசு வழிகாட்டுதலுடன், சாயம், பிரின்டிங் உள்ளிட்ட பிராசசிங் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பூரில் அமைக்க, பிள்ளையார்சுழி போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொழில்களிலும், புதிய தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கான ஆராய்ச்சி செய்து, அதனை நடைமுறைப்படுத்த ஏதுவாக, தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (சென்டர் ஆப் எக்ஸலென்ஸ்) அமைக்கப்படுகிறது. தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் (சிட்ரா) கோவையில் இயங்கி வருகிறது.

தேசிய அளவிலான ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் திறன் கவுன்சில், திருப்பூரில் இயங்கி வருகிறது. அதன்மூலமாக, தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி திட்டங்கள் தேசிய அளவில் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சாயமிடுதல் மற்றும் சாயக்கழிவு சுத்திகரிப்பு, பிரின்டிங் உள்ளிட்ட துணி பதனிடுதல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, திருப்பூரில், பிரத்யேக தொழில்நுட்ப மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, திருப்பூரில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பசுமை சாயத்தொழில்நுட்பத்தை (கிரீன் பிராசசிங் ) ஊக்குவிக்கும் வகையில், புதிய மேம்பாட்டு மையம் அமைய உள்ளது. அதற்காக, இரண்டு ஏக்கர் நிலம் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

அவசியமான ஒன்று


இந்தியாவிலேயே, திருப்பூரில் மட்டுமே, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, சுத்திகரிப்பு பணிக்கு அதிகம் செலவழிக்க வேண்டியள்ளது.

புதிய பசுமை தொழில்நுட்பத்தை கண்டறிந்து செயல்படுத்தினால் மட்டுமே, நாட்டில் சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

சாய ஆலைகளுக்கு பெரிய சவாலாக இருப்பது உற்பத்தி செலவு; தண்ணீர் பயன்பாடு வெகுவாக குறைந்திருந்தாலும், மேலும் குறைக்க திட்டமிட வேண்டும். உப்பு அதிகம் பயன்படுத்தாமலும், உப்பு இல்லாமலும் சாயமிட்டால், கழிவுநீர் சுத்திகரிப்பு பணியும் எளிதாகும்; சுற்றுச்சூழல் பாதிப்பும் 'ஜீரோ' என்றாகும்.

தற்போதைய சுத்திகரிப்பின் மூலமாக கிடைத்த, 'ஸ்லெட்ஜ்' மற்றும் 'மிக்ஸர்' சால்ட் மலைபோல் திருப்பூரில் குவிந்துள்ளது. இதுபோன்ற திடக்கழிவுகள், இறுதிகட்டத்தில் கிடைக்காமல், பயனுள்ள பொருளாக மாற்றம் செய்து, மறுபயன்பாடு செய்ய திட்டமிட வேண்டும். குவிந்துள்ள 'மிக்ஸர் சால்ட்' கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், அப்புறப்படுத்தியாக வேண்டும்.

இந்தியாவிலேயே, திருப்பூரில் மட்டுமே,

சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு, 'ஜீரோ

டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, சுத்திகரிப்பு பணிக்கு அதிகம் செலவழிக்க வேண்டியள்ளது. புதிய பசுமை தொழில்

நுட்பத்தை கண்டறிந்து செயல்படுத்தினால் மட்டுமே, நாட்டில் சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்

தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைய, இரண்டு ஏக்கர் நிலத்தில், 33 ஆயிரம் சதுர அடியில் கட்டடம் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. முதல்கட்டமாக, பொது சுத்திகரிப்பு நிலையம் அருகே, இரண்டு ஏக்கர் நிலம் வாங்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தில், நிலம் மற்றும் கட்டடம் தொழில்துறையினர் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர். மத்திய அரசு திட்டத்திலேயே கட்டுமானம் மற்றும் இயந்திரங்கள் நிறுவும் பணியை மேற்கொள்ள வேண்டுமென, திருப்பூர் வந்திருந்த ஜவுளித்துறை இணை அமைச்சர் வாயிலாக, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

- காந்திராஜன், திருப்பூர் சாய ஆலைஉரிமையாளர்கள் சங்க தலைவர்.






      Dinamalar
      Follow us