/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குஜராத்தை முந்திய தெலங்கானா; நவம்பரில் பருத்தி வரத்து அதிகரிப்பு
/
குஜராத்தை முந்திய தெலங்கானா; நவம்பரில் பருத்தி வரத்து அதிகரிப்பு
குஜராத்தை முந்திய தெலங்கானா; நவம்பரில் பருத்தி வரத்து அதிகரிப்பு
குஜராத்தை முந்திய தெலங்கானா; நவம்பரில் பருத்தி வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 11, 2024 04:56 AM
திருப்பூர்; குஜராத், மஹாராஷ்டிராவை முந்தும் வகையில், தெலுங்கானாவில் இருந்து அதிகம் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய பருத்தி ஆண்டு (2024 அக்., -2025 செப்.,) துவங்கிய முதல் மாதம் பஞ்சு வரத்து குறைவாக இருந்த நிலையில், கடந்த மாதம் அதிகரித்துள்ளது. அக்., மாதம், 17.52 லட்சம் பேல் அளவுக்கும், கடந்த மாதம், 38.03 லட்சம் பேல் அளவுக்கும் பஞ்சு, விற்பனைக்கு வந்துள்ளது. இதுவரை, 55.55 லட்சம் பேல் விற்பனைக்கு வந்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் பஞ்சு வரத்து, தலா ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தது. குஜராத்தில் இருந்து, 6.63 லட்சம் பேல், மஹாராஷ்டிராவில் இருந்து, 6.33 லட்சம் பேல், மத்திய பிரதேசத்தில் இருந்து, 3.38 லட்சம் பேல் வரத்து பதிவாகியுள்ளது. மற்ற மாநிலங்களை முந்தும் அளவுக்கு, தெலங்கானாவில் இருந்து, கடந்த மாதம் மட்டும், 9.84 லட்சம் பேல் பஞ்சு வந்துள்ளது.கர்நாடகா - 5.15 லட்சம், ஆந்திரா - 2.58 லட்சம் பேல் பஞ்சு வரத்து இருந்ததாக, பருத்திக்கழக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''புதிய பருத்தி சீசனில், தினசரி வரத்து, இரண்டு லட்சம் பேலாக உயர்ந்துள்ளது. முதல்தர பஞ்சு வரத்து துவங்கியுள்ளதால், நுாற்பாலைகளும் கொள்முதல் செய்ய ஆயத்தமாகி வருகின்றன. பஞ்சு சீசன் துவக்கம் என்பதால், ஒரு கேண்டி (356 கிலோ), 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரித்துள்ளதால், பஞ்சு விலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை,'' என்றார்.

