/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோயில் சிலை உடைப்பு: மக்கள் மறியல்
/
கோயில் சிலை உடைப்பு: மக்கள் மறியல்
ADDED : ஆக 16, 2025 01:58 AM

உடுமலை:சுவாமி சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஜல்லிபட்டியில், திருமூர்த்தி அணையின் ஒரு பகுதியில், கரட்டு பெருமாள் கோவில் அடிவாரத்தில், ஜக்கம்மாள் கோவில் உள்ளது. ஆடி வெள்ளி தினமான நேற்று, சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம், நள்ளிரவு இக்கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிலையின் முகத்தை உடைத்து, அலங்காரத்தை சிதைத்துள்ளனர்.
நேற்று அதிகாலை, கோவிலுக்கு சென்ற பொதுமக்கள், இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடுமலை - திருமூர்த்திமலை ரோடு, ஜல்லிபட்டி நான்கு ரோடு சந்திப்பில், மறியலில் ஈடுபட்டனர்.