/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வள்ளலார் கோட்டத்தில் தைப்பூச பெருவிழா
/
வள்ளலார் கோட்டத்தில் தைப்பூச பெருவிழா
ADDED : பிப் 12, 2025 12:28 AM

திருப்பூர்; திருமுருகன்பூண்டி, திருமுருக வள்ளலார் கோட்டத்தில், தைப்பூச பெருவிழா நேற்று நடந்தது.
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் அருகே அமைந்துள்ள திருமுருக வள்ளலார் கோட்டத்தில், காலை, 7:00 மணிக்கு, கொடியேற்றமும், அதனை தொடர்ந்து ஜோதி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சியும், அகவல் பாராயணமும், அன்னதானமும் நடந்தது. இதுதவிர, அவிநாசியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், காலை, 11:00 மணி முதல்,அன்னதானம் நடந்தது.
சேவூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில், காலை, 10:00 மணிக்கு அகவல் பாராயணமும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. திருப்பூர் ஆலாங்காடு வள்ளலார் கோவிலில், காலையில் ஜோதி வழிபாடும், அகவல் பாராயணமும், அன்னதானமும் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வள்ளலார் வழிபாடும், அன்னதானமும் நடந்தது.

