/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆனைமலையாறு நல்லாறு திட்டம் பிரதான பிரச்னையாக ஒலிக்கும்'
/
'ஆனைமலையாறு நல்லாறு திட்டம் பிரதான பிரச்னையாக ஒலிக்கும்'
'ஆனைமலையாறு நல்லாறு திட்டம் பிரதான பிரச்னையாக ஒலிக்கும்'
'ஆனைமலையாறு நல்லாறு திட்டம் பிரதான பிரச்னையாக ஒலிக்கும்'
ADDED : மே 18, 2025 11:22 PM

பொங்கலுார்,;
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் என்.எஸ்.பழனிசாமிக்கு, பல்லடம் அடுத்த நாதகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் 9வது நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. அய்யம்பாளையம் தியாகிகள் நினைவிடத்தில் இருந்து ஜோதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நினைவிடத்தில் வைக்கப்பட்டது.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், செயல் தலைவர் வெற்றி, பொருளாளர் தங்கராஜ், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, பிரகாஷ் உட்பட பலர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
அரசியல் காரணங்களுக்காக விரிவுபடுத்திய பி.ஏ.பி., திட்டம்
செயல் தலைவர் வெற்றி பேசுகையில், ''ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை, 65 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்த பி.ஏ.பி., திட்டம் உருவாக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக, நீராதாரத்தை ஏற்படுத்தாமல் 4.5 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிராமம் தோறும் விழிப்புணர்வு பெயர் பலகை திறந்தோம். ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதாக அனைத்து கட்சிகளும் சொல்ல காரணம் நமது போராட்டமே. கடந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக சொன்னார்கள். தி.மு.க., வெற்றி பெற்று நான்கு ஆண்டு ஆகிறது. ஆனால், எதுவும் செய்யவில்லை. 2026 தேர்தலில் ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் முக்கிய பிரச்னையாக இருக்கும்'' என்றார்.