sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நஞ்சராயன் குளத்துக்கு செயற்கை இன்னல் மின்னல் வேகத்தில் விழிக்குமா மாவட்ட நிர்வாகம்

/

நஞ்சராயன் குளத்துக்கு செயற்கை இன்னல் மின்னல் வேகத்தில் விழிக்குமா மாவட்ட நிர்வாகம்

நஞ்சராயன் குளத்துக்கு செயற்கை இன்னல் மின்னல் வேகத்தில் விழிக்குமா மாவட்ட நிர்வாகம்

நஞ்சராயன் குளத்துக்கு செயற்கை இன்னல் மின்னல் வேகத்தில் விழிக்குமா மாவட்ட நிர்வாகம்


ADDED : ஜன 05, 2024 01:27 AM

Google News

ADDED : ஜன 05, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;'வெளிநாடுகளிலிருந்து நுாற்றுக்கணக்கான பறவைகள் வலசை வந்து செல்லும் நஞ்சராயன் குளத்தில், நஞ்சு நீர் கலக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையத்தில், 420 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் கொடையாக, இங்கு, ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்கியிருப்பதால், உள்நாட்டு பறவைகள், அதிகளவில் இங்கு தஞ்சமடைந்துள்ளன.

இவை தவிர ஐரோப்பா, ரஷ்யா, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட வெளிநாடுகளை தாயகமாக கொண்ட சேன்ட் பைபர், கிரீன் ஹெரான், யூரேசியன் பார்பில், கிரேவாக் டெய்லர், டார்டர், ஸ்பூன்பில், கார்க்கினி, கூழைகிடா உள்ளிட்ட பறவைகள், இங்கு ஆண்டுதோறும் வலசை வருகின்றன.

உலகிலேயே அதிக உயரம் பறக்கும், பட்டைத்தலை வாத்து, குளிர் காலத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இக்குளத்துக்கு வலசை வருவது வழக்கம். இதுவரை, 187 வகை பறவையினங்கள், இக்குளத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

கண்காணிக்க ஆர்வம்

திருப்பூரில் உள்ள இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மட்டுமின்றி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பறவை ஆர்வலர்களும், இக்குளத்துக்கு வந்து பறவைகளை, கண்காணித்து, குறிப்பெடுத்து வருகின்றனர். குளத்துக்கு, காலையிலேயே வரும் பறவை ஆர்வலர்கள் மதிய உணவையும் எடுத்து வருகின்றனர்; மாலை வரை இருந்தும் கூட, பறவைகளை படமெடுத்து செல்கின்றனர். ஒரு சுற்றுலா தளம் போன், வேகமாக பிரபலமடைந்து வரும் இக்குளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

செயற்கை பாதிப்பு...

நஞ்சராயன் குளத்தில் ஏராளமான பறவைகளை பார்க்க முடிகிறது. இருப்பினும், குளத்தின் பெரும் பகுதியை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை; குளக்கரையில் அடர்ந்து வளர்ந்துள்ள டில்லி முள் எனப்படும் தாவரத்தை முற்றிலும் அகற்ற வேண்டும்; இதுபோன்ற செயற்கை இன்னல்களை சரி செய்யாவிட்டால் , குளத்தின் இயற்கை தன்மை பாழாகும்; இது பறவைகள் தங்குவதற்கும், வலசை வந்து செல்வதற்கும் இடையூறாக மாறிவிடும்.

- கார்த்திகேயன்

கோவை 'அருளகம்' அமைப்பு






      Dinamalar
      Follow us