sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சித்தர்கள் சினத்தால் சிதறிய 'டுபாக்கூர் பிரஸ்' கும்பல்

/

சித்தர்கள் சினத்தால் சிதறிய 'டுபாக்கூர் பிரஸ்' கும்பல்

சித்தர்கள் சினத்தால் சிதறிய 'டுபாக்கூர் பிரஸ்' கும்பல்

சித்தர்கள் சினத்தால் சிதறிய 'டுபாக்கூர் பிரஸ்' கும்பல்


ADDED : ஜன 28, 2025 05:37 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியரசு தின கொண்டாட்டம் முடிந்த நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த சித்ராவை சந்தித்தாள் மித்ரா.

''என்னக்கா, ரொம்ப டயர்டா இருக்கீங்க...''

''இல்லப்பா, குளிர் கொஞ்சம் ஜாஸ்தி. ரிபப்ளிக் டே பாக்க சிக்கண்ணா காலேஜூக்கு போனப்ப பனி அதிகம். அதனால, இப்படி,''

''சரிங்க்கா.. ஊராட்சி தலைவர்கள் இல்லாத கிராமசபா நடந்திருக்கு. வழக்கம் போல், அதிகாரிகள் ஏற்பாடுகளை செஞ்சு, நுாறு நாள் பணியாளர்களை வச்சு கூட்டம் சேர்த்திட்டாங்க. கிராமசபா கூட்டத்துக்கு வந்திருந்த முன்னாள் தலைவர்கள் குப்பையை அகற்றல. தண்ணி சரியா வரமாட்டீங்குதுனு பெரிய 'பில்டப்' கொடுத்தாங்களாம்,''

''அதாவது, தங்களது நிர்வாகத்தில் இருந்ததை காட்டிலும் நிலைமை மோசமாக இருக்கிறது என்பது போல் பேசியிருக்கின்றனர். திருப்பூர், பல்லடம் ஒன்றியங்களில், பழைய 'தலைவர்'களை போல், அதிகாரிகள் 'பெரியண்ணன்' பாணியில பேச, எந்த பிரச்னையா இருந்தாலும் சரி பண்ணி கொடுத்திடறோம். முதலில் எங்கள் மொபைல் எண்ணை குறிச்சு வச்சுக்கோங்க... ஒரு போன் போட்டா போதும் வேலையை முடிச்சு கொடுத்திடறோம்னு பேசியிருக்காங்க. இதனால், 'மாஜி' தலைவர்களை காட்டிலும், அதிகாரிகள் 'அப்ரோச்' பிடிச்சிருக்குனு பெண்கள் பாராட்டிட்டு போனாங்களாம்,''

''அடடா... நெலமை இப்படி மாறிடுச்சா,'' என சிரித்த சித்ரா, ''அக்கா, திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள சில ஊராட்சி தலைவர்களும், பெண் தலைவர்களின் குடும்பத்தினரும் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளை கைவிடாமல், தினமும் பஞ்சாயத்து ஆபீஸ் போய், தங்கள் 'பவிசை' காட்டி வருகின்றனர். இதுபோன்றவர்களின் இந்த 'பந்தா' செயலுக்கு, கலெக்டர் தான் ஒரு முடிவு கட்டணும்,'' சொன்னாள் மித்ரா.

''மித்து, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் திருப்பூரில் நடந்ததில்ல. அதில, வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணனை, மேடையில் சிறப்பு விருந்தினர்களுடன் அமரக் கூட விடாமல் ஓரம் கட்டிவிட்டனர். அ.தி.மு.க.,வில் இருந்த போது மண்டல குழு தலைவராக வலம் வந்த அவர் தற்போது ஆளுங்கட்சிக்கு தாவியதால், உரிய மரியாதை இல்லை என அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனராம்...''

இப்படியா பேசறது...


''புஷ்பா தியேட்டர் வீதி ரேஷன் கடையில, பொருட்களை வெளி மார்க்கெட்ல விற்பதாக, அதிகாரிகளுக்கு புகார் போனது. கடை விற்பனையாளரை அழைத்து, அதிகாரிகள் 'செம டோஸ்' விட்டனர். இதனால், ஆவேசமடைந்த விற்பனையாளர், பொருட்கள் வாங்க வரும் பெண்களிடம், '100 ரூபா கொடுத்து பொருளை வாங்க வக்கில்லை. இந்த லட்சணத்துல, என் மேல பெரிய கம்ப்ளைன்ட் பண்றாளுக...'' என ஏக வசனத்தில் பேசியுள்ளார். இத கேட்ட பெண்கள் சிலர் பொருட்களை வாங்காம, போயிட்டாங்களாம். இதனால, வெறுத்துப்போன பெண்கள் சிலர் விற்பனையாளர் மேல கம்ப்ளைன்ட் அனுப்ப முடிவு பண்ணிட்டாங்களாம். இதில கொடுமை என்னன்னா, விற்பனையாளரும் பெண் தான்,'' மித்ரா ஆதங்கப்பட்டாள்.

''பல்லடத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்ற வட மாநில வாலிபரை அவிநாசி மதுவிலக்கு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கூட்டிட்டு வரும்போது, எஸ்கேப் ஆயிட்டாராம். இத பார்த்த போலீசார், மக்கள்கிட்ட, 'அவன புடிங்க...' சத்தம் போட்டாலும், பிடிக்க முடியலை. அங்க தேடி இங்க தேடி கடைசில அடுத்த வீதியில, ஒரு வேனுக்கு கீழ ஒளிஞ்சிருந்த ஆசாமியை புடிச்சு, கோர்ட்ல ஆஜர்படுத்தி, நிம்மதி பெருமூச்சு விட்டாங்களாம்...'' சொன்ன சித்ரா, ஆவி பறக்கும் காபியை, மித்ராவுக்கு கொடுத்தாள்.

மீண்டும் எஸ்டிமேட்


அதனை சுவைத்தவாறே மித்ரா, ''அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல இருந்த பழைய பஸ் ஸ்டாண்டை இடிச்சிட்டு, 6 கோடி மதிப்பில, வணிக வளாகம் கட்டப்பட்டது. இதற்கான பில் கான்ட்ராக்டருக்கு செட்டில்மெண்ட் செய்யப்பட்டு விட்டது. ஆனால், கூடுதலாக கிரானைட் கல் பதிக்கணும், மின் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்பு பணிகள் முடிந்ததற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டிருக்காங்களாம். இதனை மன்ற கூட்டத்துல வச்சு 'பாஸ்' பண்ணவும் முடிவு செஞ்சிட்டாங்க. இந்த மாதிரி பிளான் போட்டு கொடுத்த அதிகாரியும், முக்கிய பொறுப்பிலுள்ளவரும் 'இணைந்து' இந்த வேலைய பார்த்துட்டாங்கன்னு, ஒரு பேச்சு உலா வருது,'' என்றாள்.

''வேல முடிஞ்ச கட்டடத்துல, மறுபடியும் என்ன வேல. அப்ப, நெருப்பில்லாம புகை வராதுங்கற...'' சிரித்தாள் சித்ரா.

''திருப்பூர் சிட்டியில், இதுக்கு முன்னாடி இருந்த அதிகாரி ஒருத்தர், டியூட்டியில ஒழுங்காக இல்லாத, சில அதிகாரிகளை எச்சரிக்கை செய்து, 'நோட்' போட்டாங்க. அதில, இப்ப ஒவ்வொருத்தராக மாட்டிட்டு இருக்காங்க. கடந்தவாரம் 'சிவில்' புகாரில் சிக்கி, பெண் இன்ஸ்., மீது நடவடிக்கை பாய்ந்தது. அதுக்கப்பறம், இன்னொரு அதிகாரி, நிர்வாக காரணங்கள் என்ற பெயரில், பக்கத்து மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். டியூட்டியில் ஏதாவது சர்ச்சையில் சிக்கியுள்ள நபர்களை பட்டியல் போட்டு 'டிரான்ஸ்பர்' செய்யும் வேலை ஜரூரா நடக்குதுங்க்கா,'' என்றாள் மித்ரா.

''புத்தக கண்காட்சி போனியா...'' என 'டாபிக்' மாற்றிய சித்ரா, ''புத்தக திருவிழாவில் சினிமா டைரக்டர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்., குறித்து சர்ச்சையா பேசிட்டு போயிட்டாரு. இது தெரிஞ்சு, ஹிந்து அமைப்பினர் மறியல் போராட்டம் செஞ்சாங்க. இத பாத்துட்டு, மற்றொரு தரப்பினரும் போராட்டம் செய்யவே, போலீசுக்கு பெரிய தலைவலியா போச்சு. ராத்திரி ஒன்றரை மணி வரைக்கும் போராட்டம் நடந்ததால, போலீஸ்காரங்க நொந்து போயிட்டாங்க. ஒரு தரப்பை பேசி சமாளிச்சாலும், மற்றொரு தரப்பை போலீசார் என்ன பேசியும் சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிட்டாங்க மித்து,''

கலெக்டரின் கடிவாளம்


''ஆமாங்க்கா. பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க. இந்த பிரச்னையால, புத்தக கண்காட்சி நடத்துற தோழர்களும் கடுப்புல தான் இருக்காங்க. இதுக்கு முன்னாடிவரை கட்டுப்பாடு விதிக்காம இருந்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நுாலக அதிகாரிகள் கண்காணிப்பில் தான், மேடை நிகழ்ச்சி நடத்தணும்னு சொல்லிட்டாங்க. அதுமட்டுமில்லாம, சிறப்பு அழைப்பாளர்கள் பேசும் முன், சர்ச்சையான விஷயங்களை பேசாதீங்கனு சொல்லிடறாங்க. இதனால, அடுத்த வருஷம், தனியாக நடத்தும் முடிவுக்கு வந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்,'' என்றாள் மித்ரா.

''புது அதிகாரி வந்தும் கூட, சில ஏரியாவில நடக்கற, இல்லீகல் 'சரக்கு' விற்பனை தொடருதாம். குறிப்பா, நார்த் லிமிட்டில், 'சரக்கு' ஓஹோ'ன்னு ஓட்றாங்களாம். இத தெரிஞ்சுகிட்ட மத்த ஸ்டேஷன் லிமிட்டில், கல்லா கட்றவங்க, போலீஸ்கிட்டயே, 'சார் அங்கெல்லாம் கண்டுக்காம விடறாங்க. நீங்க மட்டும் இப்படி 'டைட்' பண்றீங்கன்னு சொல்றாங்க. குடியரசு தினத்தன்று கூட, சில இடத்தில் காதும் காதும் வச்ச மாதிரி விற்பனை ஜோராக நடந்தது. ஆனா, மேலதிகாரிக்கு போகாம பார்த்துட்டாங்க,'' சித்ரா சொன்னதும், ''இருக்கலாங்க்கா,'' என ஆமோதித்தாள் மித்ரா.

''சிட்டியில இருக்கற ஒரு மண்டபத்தில் சித்தர்கள் மாநாடு நடந்தது. மாநாடு துவங்கிய முதல் நாளில் சென்ற சில 'டுபாக்கூர்' ரிப்போர்ட்டர்ஸ், செய்தியை கவர் பண்றோம்னு சொல்லி 'கவர்' வாங்கிட்டு போயிட்டாங்க. அடுத்த நாளும், அதே கும்பல் விழா ஒருங்கிணைப் பாளரிடம் 'கவர்' கேட்டுள்ளது. 'பத்து பேர் 'கவர்' வாங்கிட்டு போனீங்க. எதிலும் செய்திய காணோம். இப்ப மறுபடியும் வந்து ஏன்யா கேட்கறீங்கன்னு, சித்தர்களையே சினம் கொள்ள வச்சுட்டாங்க. இத கேள்விப்பட்ட ஒருவர் விபூதியை கையில் எடுத்து சாபம் விடுவது போல் ஆவேசமாகப் பேசினார். இதனைப் பார்த்து அரண்டுபோன அந்த டுபாக்கூர் கும்பல், 'சாமி... எங்களை சபித்து விடாதீர்கள்,' என கெஞ்சி கூத்தாடி, 'விட்டா போதும் சாமி' என்று கூறியவாறு 'எஸ்கேப்' ஆகிடுச்சாம்,'' சொல்லி விழுந்துவிழுந்து சிரித்தாள் சித்ரா. கூடவே மித்ராவும் சிரித்தாள்.






      Dinamalar
      Follow us