sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'

/

டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'

டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'

டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'


ADDED : நவ 03, 2025 11:54 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அ திகபட்சம், இனி, மூனு மாசம் தாங்க்கா... எலக்ஷன் அறிவிப்பு வந்துடும் போல இருக்கே...'' பேச்சை துவக்கினாள் மித்ரா.

''ஆமான்டி மித்து. கட்சிக்காரங்க எல்லாம் இப்பவே சுறுசுறுப்பாகிட்டாங்க. 'எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம், தொகுதிக்குள்ள இருந்து வேலை பார்க்கணும்; மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செஞ்சு தரணும்'ன்னு, சி.எம். உத்தரவு போட்டிருக்காரு...'' என்றாள் சித்ரா.

''ஆனா... நம்ம ஊரை பொறுத்தவரை அங்கங்க, ஒரே போராட்டமா தான் இருக்கு. கார்ப்பரேஷன்ல குப்பை கொட்ற மேட்டர் பெரிசாயிடுச்சு. விவசாயிகள், பப்ளிக் எதிர்ப்பால, கார்ப்பரேஷன் காரங்கனால எங்கயும் குப்பைக்கொட்ட முடியல. என்ன செய்றதுன்னு தெரியாம, அதிகாரிகளும், நிர்வாகமும் திணறுது. அதேமாதிரி, 'நல்லாறு, நொய்யல்ன்னு எல்லா நீர்நிலைகளும் மாசுபட்டுக்கிடக்கு'ன்னும், போராட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.

''அதுசரிதான் மித்து. ஆளுங்கட்சி தரப்போ, அத பெரிசா எடுத்துக்கிற மாதிரியே தெரியல. 'எலக்ஷன் டைம்ல, எதிர்க்கட்சிக் காரங்களோட துாண்டுதல்ல தான், இந்த மாதிரியெல்லாம் போராட்டம் பண்றாங்க'ன்னு, ஆளுங்கட்சிக்காரங்க சமாதானம் சொல்லிட்டு இருக்காங்களாம். ஆனா, பாதிக்கப்படற மக்களுக்கு தானே, அதோட கஷ்டம் என்னன்னு தெரியும்...'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.

''இந்த மாதிரி போராட்டத்தையெல்லாம், எலெக்ஷன் டைம்ல மக்கள் மறந்துடுவாங்க; கடைசி நேரத்துல, காசு கொடுத்து ஓட்டு வாங்கிடலாம்ன்னு, சில கட்சிக்காரங்க பேசறாங்களாம். ஆனா, போராட்டங்களை முன்னெடுக்கிறவங்க, தேர்தல்ல வேட்பாளர்களை களம் இறக்கினாலும், ஆச்சர்யப்படறதுக்கு இல்லைன்னும் பேச்சு கிளம்பிடுச்சு,'' என மித்ரா சொல்ல, ''அப்படியா...?'' என ஆச்சர்யப்பட்டாள் சித்ரா.

''போராட்டம்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு இன்னொரு மேட்டர் நினைவுக்கு வருது. பனியன் கம்பெனி லேபர்களுக்கு சம்பள உயர்வு பேச்சு, இழுபறியில இருக்காம். போராட்டம் பண்றது தவிர வேற வழியில்லைன்னு ஒரு தரப்பு நிர்வாகிங்க சொல்றாங்களாம். 'கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம். முடிஞ்சவரை பேச்சுவார்த்தை மூலமா பிரச்னைக்கு தீர்வு காணலாம்ன்னு, சில மூத்த நிர்வாகிகள் சொல்றாங்களாம்...'' என்றாள் சித்ரா.

மேலிட செல்வாக்கு ''திருப்பூர் - காங்கயம் ரோட்டை 'போர்வே டிராக்' ஆக மாத்தினதுக்கு அப்புறம், சிவன்மலை கோவில் பஸ் ஸ்டாப்ல பஸ்கள் நிற்கறதே இல்ல; இதனால, பக்தர்கள் கஷ்டப்பட்டாங்க. இப்போ, மினிஸ்டர் தலையிட்டு, பஸ் நின்னு போற மாதிரி நடவடிக்கை எடுத்திருக்காராம்,'' என மித்ரா சொன்னதும், ''அதான் மொதல்லயே சொல்லிட்டியே. மூனு மாசத்துல எலக் ஷன் வந்துடும்னு,'' சிரித்த சித்ரா, ''அதே மாதிரி திருப்பூர் கார்ப்பரேஷன் குப்பை பிரச்னைக்கும் ஏதாவது தீர்வு பண்ணாருன்னா பரவாயில்ல,'' என்றாள்.

''நானும் ஒரு கார்ப்பரேஷன் மேட்டர் சொல்றங்க்கா...'' என்ற மித்ரா, ''கார்ப்பரேஷன்ல, பெரிய ஆபீசர்க்கு அடுத்த 'ரேங்க்'ல இருக்கற பொறுப்புக்கு, சில வாரம் முன்னாடி ஒரு ஆபீசரை நியமிச்சாங்க. திடீர்ன்னு, அவங்களை சென்னைக்கு 'டிரான்ஸ்பர்' 'ஆர்டர்' வந்துடுச்சாம். ஆனா, அத அங்கயே போய் 'கேன்ஸல்' பண்ணிட்டு வந்துட்டாங்களாம். எந்தளவுக்கு மேலிட செல்வாக்கு இருக்கும்ன்னு பார்த்துக்கோங்க...'' என்றாள் சித்ரா.

'போஸ்டிங்ல இருக்கிறது பிரச்னை இல்ல. ஊருக்கு நல்லது பண்ற மாதிரி ஏதாவது திட்டங்களை கொண்டு வந்தா தேவல,'' என்ற சித்ரா, ''லாஸ்ட் வீக், ஆர்.டி.ஓ. ஆபீஸ்ல அக்ரி ஜி.டி.பி., நடத்தினாங்களல்ல. அதுல, 46 டிபார்ட்மென்ட் ஆபீசர்ங்க கலந்துக்கணுமாம். ஆனா, 13 ஆபீசர்ஸ் தான் கலந்துக்கிட்டாங்க. அதிலயும், சிலரு 'கடமை'க்கு உட்கார்ந்திருந்தாங்களாம். முக்கியமான ஆபீசரே வரலைன்னா பார்த்துக்கோ. குறைகேட்பு கூட்டமே பெரும் குறையா மாறிப் போச்சேன்னு, விவசாயிங்க புலம்பிட்டே போயிருக்காங்க...'' என்றாள்.

இப்படியும் 'ரிவென்ச்' ''அக்கா, தீபாவளி முடிஞ்ச கையோட, கலெக்டரோட பி.சி. அப்புறம், 13 டெப்டி தாசில்தார்களை 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம். இதுல, ஏற்கனவே, டிரான்ஸ்பராகி, 15 நாள் ஆனவங்களுக்கு கூட 'டிரான்ஸ்பர் ஆர்டர்' வந்துடுச்சாம். இப்படி தடாலடியா ஆபீசர்களை மாத்தினதுக்கு காரணம் என்னென்னு தெரியாம, மத்த ஆபீசர்ஸ் அரண்டு போயிருக்காங்க,'' என மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் மித்ரா.

''போன மாசம், கன்ஸ்யூமர் அமைப்புகளுக்கான கூட்டம் நடந்துச்சுல்ல. அது, கலெக்டர் தலைமையில தான் கூட்டம் நடக்குமாம். ஆனா, அவரு வேற வேலையா வெளிய போனதால, அவர் கலந்துக்கலையாம். அவருக்கு அடுத்த 'ரேங்க்'ல இருக்கற 'முருகப்பெருமான்' பேரை வச்சிருக்கிற ஆபீசர் தான் கூட்டத்தை நடத்தியிருக்காரு. 'ஆனா, 'கலெக்டர் தான் கூட்டத்தை நடத்தணும்; அவர்கிட்ட தான் மனுக்களை தருவோம்'ன்னு, சிலர் சொல்ல, கூட்டத்தை ரத்து பண்ணிட்டாராம் அந்த ஆபீசர். இதனால, கடுப்பான அந்த ஆபீசர், 'எந்தெந்த சங்கத்தோட நிர்வாகிங்க மேல கேஸ், வில்லங்கம் இருக்கோ, அந்த சங்கங்களை பட்டியல்ல இருந்தே துாக்கிட்டாராம்,'' என்றாள்.

''வரவர ஆபீசர்களுக்கும், பொதுமக்களுக்கும் 'டிஸ்டன்ஸ்' அதிகமாகிட்டே போகுது; என்ன பண்றது...? 'உச்' கொட்டிய, மித்ரா, ''பல்லடம் தாலுகா ஆபீஸ்ல, லஞ்சம் தலைவிரிச்சாடுதாம். குறிப்பா, மேல்மட்ட ஆபீசர்ஸ், செமையா கல்லா கட்றாங்களாம். விஜிலென்ஸ் போலீஸ்காரங்க கண்காணிக்கிற அளவுக்கு நிலைமை மாறிடுச்சுன்னா பார்த்துக்கோ...'' என்றாள் சித்ரா.

'அட்ராசிட்டி' ஆபீசர் ''காங்கயம் ஸ்டேஷன்ல இருக்கற ஒரு 'தேவ' ஆபீசர், போலீஸ்காரர்களை ஆபாசமா திட்றது, புகார் கொடுக்க வர்றவங்களை ஒருமைல பேசறது, கோர்ட்டுக்கு போக வேண்டிய சிவில் பிரச்னைகள்ல தலையிட்டு, கல்லா கட்றது, பொய் கேஸ் போடறதுன்னு, 'அட்ராசிட்டி' பண்றதுல ஆல் ரவுண்டரா இருக்காராம். இத பெரிய ஆபீசர் கொஞ்சம் கவனிச்சாருன்னா பரவாயில்ல,'' என்றாள்.

''போன அ.தி.மு.க. கவர்மென்டில, நார்த் வி.ஐ.பி.,யோட உதவியாளரா இருந்த ஒருத்தரு, அடுக்குமாடி குடியிருப்புல வீடு வாங்கித்தர்றதா சொல்லி நிறைய பேருக்கிட்ட இருந்து, கிட்டத்தட்ட 'ஒன்றரை சி' வரை கல்லா கட்டியிருக்காரு. ஆட்சி மாற்றம் வந்ததால, காசு வாங்கினவங்களுக்கு வீடு வாங்கித்தர முடியாம போச்சாம். இப்போ, பணம் கொடுத்தவங்க நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். வாரி சுருட்டின காசுல, 'மகராஜனா' வாழணும்ன்னு ஆசைப்பட்ட அந்த உதவி யாளரு, இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம, 'இதோ தர்றேன்... அதோ தர்றேன்'னு கண்ணாமூச்சி காட்டிட்டு இருக்காராம்,'' என்றாள் சித்ரா.

'வீடு வாங்க பணம் கொடுத்து ஏமாறாதீங்கன்னு, ஆபீசர்ஸ் எவ்ளோ சொல்லியும் மக்கள் கேட்கிறதேயில்ல. என்னதான் பண்றது...'' என ஆவேசப்பட்டாள் சித்ரா.

''அக்கா, அடுத்த வருஷம் நடக்கப்போற அசெம்பிளி எலக் ஷனில், லிங்கேஸ்வரர் தொகுதியில 'சீட்' அ.தி.மு.க.வில் பலத்த போட்டியாம். குறிப்பாக, 'சிட்டிங்' விஐபி சன் ரொம்பவே டிரை பண்றாராம். ஆனா, அவருக்கு கொடுக்கக்கூடாதுன்னு கட்சிக்குள்ள எதிர்ப்பு வலுத்து வருகிறதாம். அதோடில்லாம, தலைமைக்கு, 'ஐந்து சி' கட்றவங்களுக்குதான் 'சீட்' தருவாங்களாம். ஆனா, ஆளுங்கட்சியில இந்த மாதிரி போட்டி ஏதும் பெரிசா இல்லையாம்...'' மித்ரா சொன்னாள்.

''ஒருவேள லாஸ்ட்எலக் ஷன் போல, கூட்டணிக்கு தள்ளி விட்டுருவாங்களோ...'' என சிரித்த சித்ரா, ''மித்து, லாஸ்ட் வீக், மங்கலம் ரோட்டிலுள்ள ஒரு விநாயகர் கோவிலுக்குள் 'சரக்கு' ஆசாமி, தொழுகை நடத்தினாரில்ல. இத தெரிஞ்சுகிட்ட போலீஸ், இந்த விவகாரத்தை மூடி மறைப்பதில் குறியாக இருந்துள்ளனர். அதுமட்டுமில்லாம, கோவில் தரப்பில் கம்ப்ளைன்ட் கொடுக்க முன்வராமல், எச்சரிக்கையுடன் விட்டதாக கூறினார். ஆனா, நடந்ததே வேற. கோவிலுக்கு சென்ற போலீசார், தொழுகை நடத்தியதை யார் யார் வீடியோ எடுத்தீர்கள் என, சத்தம் போட்டு, மக்களின் மொபைல் போன்களை வாங்கி, அழிக்க முயன்றனர். அப்படி யிருந்தும் கூட, சிலர் வீடியோவ பலருக்கும் 'ேஷர்' பண்ணிட்டாங்க. இதனால, வேற வழியில்லாம, கோவில் நிர்வாகிகள்கிட்ட கம்ப்ளைன்ட் வாங்கி, கேஸ் போட்டு, அந்த ஆசாமியை அரெஸ்ட் பண்ணாங்க...'' இதுபோன்ற கெடுபிடியாலதான், புகார் கொடுக்க முன் வரவில்லையாம்,'' என்றாள் சித்ரா.

'கில்லாடி' ஆசாமி ''அதானே, பார்த்தேன்...'' என்ற மித்ரா, ''அக்கா, காங்கயம் சப்-டிவிஷன்ல, டிஐஜி பேர சொல்லி சிலர், மாசாமாசம் மாமூல் பண்றாங்களாம். அதுல, குறிப்பா 'பிரகாசமான 'டிவி' ரிப்போர்ட்டர் ஒருத்தர், 'எனக்கு கட்டிங் வரலீன்னா, அதிகாரியிடம் போட்டு கொடுப்பேன்' என மிரட்டல் விடுத்து வசூலிக்கிறாராம். அப்படியும் கொடுக்கலீன்னா, ஏதாவது தகவலை டிஜஜிக்கு அனுப்புவதை வழக்கமா வச்சுருக்கிறாராம். இதனால, அந்த ரிப்போர்ட்டர பத்தி, அவங்க 'ெஹட் ஆபீசுக்கு' அனுப்ப கம்ப்ளைன்ட் ரெடியாகுதாம்,'' என விவரித்தாள்.

''அங்க மட்டுமில்ல. இங்க சிட்டியிலும் தான். 'டுபாக்கூர்' ரிப்போர்ட்டர்ஸ் ஆட்டம் தாங்க முடியல,'' என்ற சித்ரா, ''பூண்டியில நடந்த கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவத்துல, பக்தர்கள் பயங்கர துன்பத்தை அனுபவிச்சாங்க, தெரியுமா?''

''பயங்கர கூட்டம்னு கேள்விப்பட்டேன்...''

''இல்லப்பா, கோவிலுக்கு வர்ற வழி நெடுகிலும், கடைகளை வைக்க அனுமதி கொடுத்துட்டாங்க. இதுக்காக, ஆளுங்கட்சிக்காரங்க, 'மாமூலும்' வாங்கிட்டாங்களாம். கடைகள் வச்சதால, பக்தர்கள் நடக்க வழியே இல்ல. அதுமட்டுமில்லாம, எங்க பார்த்தாலும் டூவீலர், போர் வீலர் பார்க்கிங் வேற. அதிலயும், சஷ்டி விரதமிருந்த பக்தர்கள், சுவாமி கும்பிட்டு வர்றதுக்குள்ள படாதபாடு பட்டுட்டாங்க,''

''இதில, என்ன கொடுமைன்னா. வழியில கடை வச்சவங்க, 'கடை முன் நிக்காதீங்கன்னு' பக்தர்களை துரத்திட்டே இருந்தாங்களாம். இவ்வளவு பெரிய கூட்டம் வரும்னு தெரிஞ்சும்கூட, கோவில் நிர்வாகத்தினர் முன்கூட்டியே ஒரு ஏற்பாடு கூட உருப்படியா பண்ணல. வேற வழியில்லாம, பக்தர்களும் கஷ்டப்பட்டு சுவாமி கும்பிட்டு போனாங்களாம்,'' வேதனை தெரிவித்தாள் சித்ரா.

''இந்த கொடுமைகளுக்கெல்லாம், அந்த திருமுருக நாதர் தான் ஒரு முடிவு கட்டணும்,'' என்ற மித்ரா, ''அக்கா... நான் கெளம்பறேன்,'' என புறப்பட்டாள்.






      Dinamalar
      Follow us