/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
/
தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
ADDED : செப் 28, 2025 04:50 AM

திருப்பூர் : ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம், அவிநாசி ரோடு, குமார்நகர் அருகே, 4.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. தமிழக முதல்வர், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, கடந்த மாதம் திறந்து வைத்தார். கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட கட்டடம், திறப்பு விழா முடிந்தும், பயன்பாடின்றி இருக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) மற்றும் சமரசம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. சமூக பாதுகாப்பு திட்ட உதவி கமிஷனர் அலுவலகம், வாடகை கட்டடத்தில் மேட்டுப்பாளையம் அருகே இயங்கி வருகிறது.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது :
'தொழிலாளர்கள், ஒவ்வொரு பணிக்காக, பல்வேறு இடங்களுக்கு சென்றுவர வேண்டியுள்ளது. வியாபாரிகளும், எடைக்கருவி முத்திரை தொடர்பாக, அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர்.
கட்டி முடித்து, முதல்வரால் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடத்தை விரைவில், பயன்பாட்டுக்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.