/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காகும் பிரதான கால்வாய்
/
குப்பை கிடங்காகும் பிரதான கால்வாய்
ADDED : ஜன 11, 2025 09:42 AM
உடுமலை : அமராவதி பிரதான கால்வாய் கரை, குப்பைக்கிடங்காக மாற்றப்படும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அமராவதி அணை, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு பிரதான கால்வாய் வாயிலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இக்கால்வாய் வாயிலாக, 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில், பிரதான கால்வாய் கரைகளில், அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து கொண்டு வந்து குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும், சில ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினரும், கால்வாய் கரையில், குப்பைக்கிடங்கு அமைத்துள்ளனர்.
அங்கிருந்து, பல்வேறு கழிவுகள், நேரடியாக வந்து கால்வாயில் விழுகிறது. இவ்வாறு, பல்வேறு இடங்களில், பாசன கால்வாய் பரிதாப நிலையில் உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு ஆதாரமான கால்வாய், திறந்தவெளி கழிப்பிடமாகவும், குப்பை தொட்டியாகவும் மாறியுள்ளது வேதனையளிக்கிறது. நீரை மாசுபடுத்தும் இப்பிரச்னை குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

