/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
/
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
ADDED : மார் 03, 2024 11:42 PM

பொங்கலுார்;பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 1996ல் பள்ளி இறுதி ஆண்டு படித்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ஒவ்வொருவரும் தங்கள் பணி புரியும் இடம், தொழில், குடும்பம் பற்றி கலந்துரையாடினர். தாங்கள் முன்பு செய்த குறும்புத்தனங்கள் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பாடம் கற்பித்த ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். மறைந்த முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் தங்களுடன் பயின்று மறைந்த சக மாணவர் களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தினர். படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு அகமகிழ்ந்தனர். ஆசிரியர்களுடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். தாங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு, அதற்காக முயற்சி செய்வது என்று முடிவு செய்தனர். ஆசிரியர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு பின் நீங்காத நினைவுகளுடன் கலைந்து சென்றனர்.

