/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொலிவு பெறும் அமராவதி ஆற்றுப்பாலம்: கொழுமம் மக்கள் மகிழ்ச்சி
/
பொலிவு பெறும் அமராவதி ஆற்றுப்பாலம்: கொழுமம் மக்கள் மகிழ்ச்சி
பொலிவு பெறும் அமராவதி ஆற்றுப்பாலம்: கொழுமம் மக்கள் மகிழ்ச்சி
பொலிவு பெறும் அமராவதி ஆற்றுப்பாலம்: கொழுமம் மக்கள் மகிழ்ச்சி
ADDED : பிப் 02, 2024 12:19 AM

மடத்துக்குளம்:உடுமலையில் இருந்து கொழுமம் வழியாக, பழநி செல்லும் ரோட்டில், அமராவதி ஆறு குறுக்கிடுகிறது. முன்பு, ஆற்றை கடக்க இரு மாவட்ட மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, கடந்த, 1969ல் உயர் மட்ட பாலம் கட்டுமான பணி துவங்கி, 1970ல், பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையோர கிராமங்கள் மற்றும் சுற்றுலா வாகன போக்குவரத்தில், இந்த பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆற்றின் அழகை ரசித்தபடி, பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில், நடைபாதையும், பாலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீண்ட காலமாக வர்ணம் பூசப்படாமல், பாலம் பொலிவிழந்து காணப்பட்டது. நுழைவாயில் துாண்களும், பரிதாப நிலையில் இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, நெடுஞ்சாலைத்துறை மடத்துக்குளம் உட்கோட்டம் சார்பில், பாலத்தில் சிறிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் வர்ணம் பூசி பொலிவுபடுத்தப்படுவது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றுப்பாலத்தின் நுழைவாயிலை ஒட்டி, ஆற்றுக்கு செல்வதற்கான படிக்கட்டுகளை சீரமைத்தால், அவ்விடம், சுற்றுலா பயணியரை ஈர்ப்பதாக அமையும்.
இதே போல், கணியூர் - கடத்துார் ரோட்டிலுள்ள, அமராவதி ஆற்றுப்பாலத்திலும் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

