/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் பதிக்க தோண்டிய குழி முறையாக மூடாததால் அவதி
/
குழாய் பதிக்க தோண்டிய குழி முறையாக மூடாததால் அவதி
ADDED : ஜூலை 18, 2025 12:08 AM

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு நல்லுாரிலிருந்து பிரிந்து செல்லும் ரோடு, முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை, காசிபாளையம் பகுதிக்கும், காங்கயம் ரோடு கூலிபாளையம் நால் ரோடு பகுதிக்கும் சென்று சேரும் முக்கிய ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, குழி தோண்டி குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவடைந்து பல நாட்களாகியும் இது வரை இந்த குழிகள் முறையாக மூடி அதன் மீது தார் ரோடு போடப்படாமல் உள்ளது. இதனால், இந்த ரோட்டில் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில் தான் பயணிக்க வேண்டியதாக உள்ளது.
மண் கொட்டி மூடிய குழியாக உள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது மண் துகள் காற்றில் பறந்து செல்கிறது. மேலும் ரோடு சேதமடைந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி சிறு விபத்து ஏற்படுவது, வாகனங்கள் பழுதடைவதும் சகஜமாக உள்ளது. குழாய் பதிப்பு பணிகள் நிறைவடைந்தால் உடனுக்குடன் தார் ரோடு போட்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.