/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணைப்பு ரோடு படுமோசம் கிராம மக்கள் வேதனை
/
இணைப்பு ரோடு படுமோசம் கிராம மக்கள் வேதனை
ADDED : மே 23, 2025 12:27 AM
உடுமலை : உடுமலை அருகே கிராம இணைப்பு ரோடு குண்டும், குழியுமாக மாறி பல ஆண்டுகளாகியும், ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் புதுார். கிராமத்தில் இருந்து பழையூர் வழியாக அடிவள்ளிக்கு கிராம இணைப்பு ரோடு உள்ளது. பெரியபட்டி - நெகமம் ரோட்டில் இருந்து பிரியும் இந்த இணைப்பு ரோட்டை, அப்பகுதி விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாமல், ரோடு பரிதாப நிலைக்கு மாறி விட்டது; குண்டும், குழியும் அதிகரித்து, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அவ்வழியாக செல்ல சிரமப்படுகின்றனர்.
இந்த ரோட்டை புதுப்பிக்க குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்திடம் மக்கள் மனு கொடுத்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகளை கண்டுகொள்ளாத, ஒன்றிய நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.