ADDED : டிச 15, 2025 05:07 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குப்பை அகற்றும் பிரச்னை, மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து பெறுவது, பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வியாபாரிகள் சிலர் கூறியதாவது:
பாலிதீன் பயன்பாட்டை தவிர்க்க, பெரும்பாலான வியாபாரிகள் தயாராக உள்ளனர். இருப்பினும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், வெறுங்கையுடன் வருகின்றனர். பொருட்களை பாலிதீன் கவரில் போட்டு தருமாறு கேட்கின்றனர். 'பாலிதீன் கவர் இல்லை; தடை செய்யப்பட்டுள்ளது' எனக் கூறினால், பொருட்களை வாங்காமல் அருகேயுள்ள கடைக்கு சென்று விடுகின்றனர். இதனால், வியாபாரம் பாதிக்கிறது; பாலிதீன் தடையை மக்கள் இயக்கமாக மாற்றும் போது, அவற்றை பயன்படுத்தும் மக்கள், முதலில், அதை நிராகரிக்க வேண்டும். அப்போது தான் மாற்றம் வரும்.

