தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆட்சி மாறியும் காட்சி மாறலையே கடந்த ஆட்சி விளம்பரம் மறைத்து மக்கள் செய்தி தொடர்பு வாகனம் உலா

ஆட்சி மாறியும் காட்சி மாறலையே கடந்த ஆட்சி விளம்பரம் மறைத்து மக்கள் செய்தி தொடர்பு வாகனம் உலா

ஆட்சி மாறியும் காட்சி மாறலையே கடந்த ஆட்சி விளம்பரம் மறைத்து மக்கள் செய்தி தொடர்பு வாகனம் உலா


UPDATED : ஜூலை 02, 2026 10:19 PM

ADDED : ஜூலை 02, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 10:19 PM ADDED : ஜூலை 02, 2026 10:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: தமிழக அரசு மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில், பிரசார விழிப்புணர்வு வாகனம், திருப்பூர் மாவட்டத்திலும் இயங்கி வருகிறது. அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த வாகனம் இயக்கப்படுகிறது. அதிநவீன எல்.இ.டி., திரையுடன் இயங்கும் இந்த வாகனத்தில், அரசு சார்ந்த குறும்படங்கள், சாதனைகள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்களும் பொதுமக்களுக்காக ஒளிபரப்பப்படுகின்றன. தமிழகத்தில், எந்த அரசு ஆட்சி அமைக்கிறதோ, அதற்கேற்ப பிரசார வாகனத்தில் விளம்பரங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

கடந்த தி.மு.க., ஆட்சியில், மாவட்ட அமைச்சரான சாமிநாதன், செய்தித் துறைக்கு பொறுப்பு வகித்தார். கடந்த ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள் குறித்து, வாகனத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்தால், பிரசார வாகனத்தில், முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரங்கள், சாதனைகள் உள்ளிட்டவை வெள்ளை பேப்பர் கொண்டு மறைக்கப்பட்ட நிலையில், வாகனம் உலா வந்து கொண்டுள்ளது.

எனவே, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்ந்த பிரசார வாகனத்தில், புதிய அரசின் திட்டங்கள், சாதனைகளை வெளியடுவது மட்டுமின்றி, புகை மற்றும் போதை பழக்கம், நெகிழி பை தடை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us