/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பள்ளிச்சுவரும் பாடம் கற்பிக்கும்'
/
'பள்ளிச்சுவரும் பாடம் கற்பிக்கும்'
ADDED : நவ 16, 2025 12:33 AM

''ந மது பள்ளியின் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க உதவுங்கள்; குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டவும்...''
திருப்பூர், 15 வேலம்பாளையம் , மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, சுவரில் தன்னம்பிக்கை, அறிவுரை சொல்லும் பல வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதில், இதுவும் ஒன்று.
ஆனால், அந்த பள்ளிச்சுவரை சுற்றிலும் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால், அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.
அதே பள்ளி சுவற்றில் இப்படியொரு வாசகம்...
''மிகப்பெரிய நோக்கத்தை காட்டிலும் மிகச்சிறிய செயல் மேலானது; செய்து முடித்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான்... '' என்பது தான் அது.
'குப்பையை வீடுகளில் இருந்தே தரம் பிரிக்க வேண்டும்; தரம் பிரித்த நிலையில் தான் துாய்மைப் பணியாளர்கள் அவற்றை வாங்கி, தரம் பிரித்து, அப்புறப்படுத்த வேண்டும்' என்பது தான் துாய்மைப்பணியின் அடிப்படை செயல்.
இந்த சிறிய செயலை கூட செம்மையாக செய்து முடிக்க முடியாததான் விளைவு தான், சுகாதாரம் என்பது, மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது' என்பதை இந்த வாசகம் போதிக்கிறது.

