/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புண்ணியம் தரும் சுந்தரகாண்டம்! ஆன்மிக புலவர் பேச்சு
/
புண்ணியம் தரும் சுந்தரகாண்டம்! ஆன்மிக புலவர் பேச்சு
புண்ணியம் தரும் சுந்தரகாண்டம்! ஆன்மிக புலவர் பேச்சு
புண்ணியம் தரும் சுந்தரகாண்டம்! ஆன்மிக புலவர் பேச்சு
ADDED : ஆக 05, 2025 11:30 PM

உடுமலை; உடுமலை 'நாமத்வார்' பிரதிஷ்டா தினத்தையொட்டி சிறப்பு சொற்பொழிவு மற்றும் அகண்ட நாம சங்கீர்த்தனம் நடந்தது.
உடுமலையில், மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமியின் 'நாமத்வார்' செயல்பட்டு வருகிறது. இந்த பிரதிஷ்டா தினத்தையொட்டி, 'ஸ்ரீ சுந்தரகாண்டம்', என்ற தலைப்பில், ஆன்மிக புலவர் குருசுபாசுசந்திரபோசு, பேசியதாவது:
சுந்தரகாண்டம் மிக புனிதமானதாகும். ஈடு செய்ய முடியாத, இழக்கக்கூடாத, ஒரு பொருளை இழந்தவர்கள், மீண்டும் ஒரு பொருளை அடைதலை 'சுந்தர' என வடமொழியில் தெரிவிப்பார்கள்.
ஒப்பற்ற சிறப்புக்குரிய சீதையை ராமன் இழந்து மீண்டும் கைவரப் பெற்றார். அதனால், இந்த காண்டம் சுந்தரகாண்டம் என்பது ஒரு கருத்தாகும்.
ராமாயணம் முழுதும் கேட்க முடியாதவர்கள் சுந்தர காண்டம் மட்டும் கேட்டால் கூட ராமாயணம் முழுவதும் கேட்ட புண்ணியம் கிடைக்கும். இதை பாராயணம் செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து அகண்ட நாம சங்கீர்த்தனம் நடந்தது.