/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனைக்கு செல்ல மூன்றாவது வழி
/
அரசு மருத்துவமனைக்கு செல்ல மூன்றாவது வழி
ADDED : மார் 22, 2025 11:04 PM

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு ஒரே பொதுவான நுழைவு வாயில் உள்ளது. மகப்பேறு மருத்துவப் பிரிவு, பிரசவ பிரிவுக்கு மருத்துவ மனை வளாகத்தில் கிழக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டுமான பணி கிழக்கு பகுதியில் நடந்து வருவதால், அங்கு வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளது.
பொதுவான மைய நுழைவு வாயில் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. விபத்து, பிரசவம், நெஞ்சுவலி, தலைக்காய சிகிச்சைக்கு திடீரென மூன்றுக்கு மேற்பட்ட, ஆம்புலன்ஸ்கள் அடுத்தடுத்து வரும் போது, நோயாளிகளை இறக்கி விட்டு, அவை உடனடியாக வெளியேறி செல்ல சிரமம் ஏற்படுகிறது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, தங்கியுள்ள நோயாளிகளை பார்க்க மட்டும், 500க்கும் அதிகமானோர் தினமும் வருகின்றனர். சிலர் மெயின் கேட் அருகே வாகனங்களை குறுக்காக நிறுத்தி, அவசரமாக உள்ளே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இத்தகைய சிரமங்களை தவிர்க்க, அவசர சிகிச்சை பிரிவு எதிரே, மருத்துவமனை மேற்கு திசையில் உடனடியாக ஆம்புலன்ஸ், வாகனங்கள் வெளியேறிச் செல்ல புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இவ்வழியில் வெள்ளியங்காடு, 60 அடி ரோடு சந்திப்பு, சந்திராபுரம் பிரிவு ரவுண்டானா சந்திப்புக்கு விரைந்து செல்ல முடியும். அனைத்து வாகனங்களும் மெயின் கேட், மருத்துவமனை பஸ் ஸ்டாப் சென்று தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை
உள்ளே வரும் வாகனங்கள் மேற்கு திசையில் உள்ள புதிய வழித்தடம் வழியாக, பொறுமையாக வெளியே செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.