/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூட்டிய வீட்டில் பணம் - நகை திருட்டு
/
பூட்டிய வீட்டில் பணம் - நகை திருட்டு
ADDED : ஜூன் 18, 2025 12:10 AM

அவிநாசி; அவிநாசி ஒன்றியம், போத்தம்பாளையம் - கூட்டப்பள்ளி பிரிவு பஸ் ஸ்டாப் அருகே வசிப்பவர் விஜயகுமார் 51. இவரது மனைவி ஜெயலட்சுமி 43. இவர், திருப்பூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், ஜெயலட்சுமி கூட்டப்பள்ளி அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல் இருவரும் வேலைக்குச் சென்றனர். மாலை ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்ததில், முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவருக்கு தகவல் அளித்தார். அவர் வந்து சேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்ற பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 4.5 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றது தெரிந்தது. சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்குள், சேவூர், போத்தம்பாளையம் அருகே நட்டு கொட்டையான்புதுார் பஸ் ஸ்டாப், பவர் ஆபீஸ், தற்போது கூட்டப்பள்ளி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.