/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவில் தேரோட்டத்துக்கு இன்னும் 25 நாட்கள்; தேர் வல வீதிகளில் பக்தர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?
/
அவிநாசி கோவில் தேரோட்டத்துக்கு இன்னும் 25 நாட்கள்; தேர் வல வீதிகளில் பக்தர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?
அவிநாசி கோவில் தேரோட்டத்துக்கு இன்னும் 25 நாட்கள்; தேர் வல வீதிகளில் பக்தர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?
அவிநாசி கோவில் தேரோட்டத்துக்கு இன்னும் 25 நாட்கள்; தேர் வல வீதிகளில் பக்தர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?
ADDED : ஏப் 09, 2025 11:37 PM

அவிநாசி; ஆண்டுதோறும் அவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா சித்திரை மாதம் விமரிசையாக நடைபெறும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என பெருமை பெற்ற பெரிய தேர், நான்கு ரத வீதிகளில், பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து செல்லும். தேரோட்டத்தின் போது, ரத வீதிகளில் குறுக்காக செல்லும் மின் கம்பிகளை அகற்றி, தேரோட்டம் நடைபெற்று வந்தது. தேர் ஒரு வீதியில் இருந்து மற்றொரு வீதிக்கு செல்லும்போது மீண்டும் மின்சார கம்பிகள் கம்பத்தில் இணைக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறைகளை மாற்றி சித்திரை தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளிலும் தடையில்லாத மின்சாரம் வழங்கவும், மின் கம்பங்கள், கம்பிகளை அகற்றி நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் இணைப்புகளாக மாற்றி, தற்போது இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு ரத வீதியில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்றது.
அசம்பாவிதம் தவிர்ப்பு
தற்போது சித்திரை தேர் திருவிழாவுக்கு, 25 நாட்களே உள்ள நிலையில் மேற்கு ரத வீதியில், ரோடு போடும் பணிகளை நேற்று முன்தினம் பேரூராட்சி நிர்வாகம் துவங்கியது. அதில் வீடுகள், கடைகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் மின் வாரியம் மூலம் பாதிக்கப்பட்ட புதைவட மின் இணைப்புகள் சேதமானது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து வக்கீல் சத்தியமூர்த்தி, மின்வாரிய செயற்பொறியாளருக்கு அனுப்பிய மனு குறித்து கூறியதாவது:
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, நான்கு ரத வீதியிலும் புதைவட மின் கம்பிகளாக மாற்றம் செய்ய மின்வாரியத்தினர் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது பணிகள் முடிந்து நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகமும் சித்திரை தேர் திருவிழாவுக்கு முன்பாக நான்கு ரத வீதியிலும் ரோடு போடும் பணிகளை உடனடியாக செய்திருக்க வேண்டும்.
பாதுகாப்பின்றி பதிப்பு
ஆனால், பல மாதங்களாக ரோட்டை சீரமைக்கும் பணியை செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதற்கிடையில் மேற்கு ரத வீதியில் அரை அடி ஆழத்திற்கும் குறைவாக புதைவட மின்கம்பிகளை பாதுகாப்பில்லாமல் பதிக்கப்பட்டுள்ளதால், ரோடு போடும் பணிகளுக்கு பொக்லைன் மூலம் குழு தோண்டியதில், மின் இணைப்புகள் அனைத்தும் சேதமடைந்து வெளியில் வந்துள்ளது.
தப்பிய ஊழியர்கள்
அப்போது ரோடு போடும் பணியில் ஈடுபட்டிருந்த பேரூராட்சி ஊழியர்கள் கண நேரத்தில் உயிர் தப்பினர். மின்வாரியத்தினர் புதைவட மின்கம்பிகளை ரோட்டின் ஓரமாக ஆழத்தில் பதித்து தேர் வரும் பாதைகளில் ரோட்டில் அழுத்தம் ஏற்பட்டாலும், பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட மின் ஒயர்கள் பழுதாகாமல், மின் வினியோகம் தடைபடாமலும் தேர் வடம் பிடித்து இழுத்து வரும் பக்தர்கள் உயிருக்கு பாதுகாப்பாக தேர் விழா நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

