ADDED : செப் 16, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழி அருகேயுள்ள மாநகராட்சி வார்டு எண்:59 பகுதியில் 15 நாட்கள் ஆகியும் குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரே குழாய்தான் இருக்கிறது. இதில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. சிலர், வீட்டில் போர் இருப்பதால் சமாளித்து விடுகின்றனர். ஆனால் பெருமாபாலான குடும்பங்கள் பெரிதும் சிரமப்படுகிறோம். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது குழாய் உடைந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், உடைந்த குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து, குடிநீர் வழங்க வேண்டும்,' என்றனர்.