/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதவி மையம் இருக்கு; உதவத்தான் ஆளில்லை! அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவலம்
/
உதவி மையம் இருக்கு; உதவத்தான் ஆளில்லை! அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவலம்
உதவி மையம் இருக்கு; உதவத்தான் ஆளில்லை! அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவலம்
உதவி மையம் இருக்கு; உதவத்தான் ஆளில்லை! அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவலம்
ADDED : ஜன 20, 2025 04:50 AM

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவ, உதவி மையம் உள்ளது. ஆனால், உதவுவதற்கான பணியாளர் இல்லை. எப்போதுமே இருக்கை காலியாகவே உள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு அருகே நோயாளிகள் மற்றும் உடன் வருவோருக்கு உதவ, உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் தங்கள் கருத்துகளை பதிவிட பதிவேடும் உள்ளது. மருத்துவமனை நான்கு தளங்களை கொண்டதாகவும், குழந்தைகள், மகப்பேறு பிரிவு தனித்தனியே செயல்படுவதால், நோயாளிகளுக்கு வழிகாட்ட உதவி மையம் பேருதவியாக இருந்தது.
கடந்த சில நாட்களாக இந்த உதவி மையத்தில் இருக்கை மற்றும் பதிவேடு மட்டுமே உள்ளது. உதவிக்கு அலுவலர், உதவியாளர் யாருமில்லை. புதியதாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், டோக்கன் பெறுமிடம் உள்ளிட்ட விபரங்களை தெரியாமல், பணியில் உள்ள அலுவலர், பாதுகாவலர்களிடம் ஒவ்வொருவரும் விபரம் கேட்கின்றனர். ஆங்காங்கே வார்டு எண் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, முதியோர் தடுமாறுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும், 2 ஆயிரம் புறநோயாளிகள் மருத்துவக் கல்லுாரி மருத்துமனைக்கு வருகின்றனர். மருத்துவ ஆலோசனை பெற்று, மருந்து, மாத்திரை வாங்கிச் செல்கின்றனர். எனவே, புதியதாக வருவோர் தடுமாறாமல் இருக்க உதவி மையத்தின் செயல்பாட்டை, மருத்துவக் கல்லுாரி டீன் உறுதி செய்திட வேண்டியது மிக அவசியம்.
மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை தனித்தனியே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவு தனி பிளாக்கில் செயல்படுகிறது.
ஒவ்வொரு பிளாக்குக்குள் சென்ற பின்னரே எந்தெந்த வார்டு எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதனால், தேவையற்ற குழப்பம், அலைச்சல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில் அருகே ஒட்டுமொத்த வளாகங்களின் வரைபடம், எந்தெந்த பிளாக்கில், எந்த வார்டு, எந்த நம்பர் என்ற விரிவான வரைபடம் வைத்து விட்டால், நோயாளிகள், அவர்கள் உடன் அழைத்து வருவோரின் அலைச்சல் வெகுவாக குறையும்.