ADDED : ஜூன் 22, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்- காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
மேம்பால ரோட்டின் இரு பகுதிகளிலும் கழிவுநீர் செல்ல நெடுஞ்சாலை துறை சார்பில், கட்டப்பட்டு வந்த சாக்கடை கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அங்குள்ள திருவள்ளுவர் நகர் பகுதிகளில் இருந்து, வரும் கழிவு நீர் செல்ல வழியின்றி ரோட்டில் குளம்போல் தேங்கி உள்ளது.
துர் நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென வார்டு கவுன்சிலர் தங்கராஜ், நெடுஞ்சாலை துறையிடம் மனு கொடுத்துள்ளார்.