/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசாரம்!
/
கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசாரம்!
ADDED : மார் 28, 2025 03:21 AM

விஜயகுமார் (பசுமை சூழல் அமைப்பு): மண்ணுக்கு மாற்றாக எம் - சாண்ட், பி - சாண்ட் கட்டாயம் தேவை. கல்குவாரி தொழிலுக்கு அனுமதி வழங்காவிட்டால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும்.
கல்குவாரி உரிமத்தை ரத்து செய்வது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். எனவே, விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய கல்குவாரிகளுக்கு நிச்சயம் அனுமதி வழங்க வேண்டும்.
கார்த்திகேயன் (சங்கோதிபாளையம்): தொழில்கள் நன்றாக நடந்தால் தான், அரசும் மக்களும் நன்றாக இருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட தொழில்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடக்க வேண்டும்.
அதிவேக லாரிகள், ஜல்லிகள் ரோட்டில் இறைத்து செல்வது உள்ளிட்ட விதிமுறைகளை தவிர்க்க வேண்டும். அனைவரும்தான் சாலையை பயன்படுத்துகிறோம். இவ்வாறு, சாலையை பயன்படுத்தும் நாம், அதற்கான மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் கல்குவாரிகளை வேண்டாம் என்று கூறுவது சரியாக இருக்காது.
பழனிசாமி (ஊராட்சி முன்னாள் தலைவர், கோடங்கிபாளையம்): கல்குவாரி தொழில் அபாயகரமானது என்பதால், இதில் நெறிமுறைகளை பின்பற்றியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. வீடுகள், சாலை, அலுவலகம், மருத்துவமனை என, அனைத்துக்கும் கனிம வளங்கள் தேவை என்பதால், இது காலத்தின் கட்டாயம்.
தேவைகளை நிறைவேற்ற கனிம வளங்கள் எடுத்துதான் ஆக வேண்டும். ஏற்கனவே கல்குவாரிகள் உள்ள இடத்தை விட்டுவிட்டு, வேறு இடத்துக்குச் சென்றால், அங்கும் எதிர்ப்பு கிளம்பும். எங்கு சென்றாலும் எதிர்ப்பு என்றால், கனிம வளங்கள் எப்படி கிடைக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.
பல்லடம், மார்ச் 28--
பல்லடம் அருகே, காரணம்பேட்டையிலுள்ள திருமண மண்டபத்தில், ஏழு கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சத்யன் தலைமை வகித்தனர். கூட்டத்தில், கல் குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது, வழங்கலாம் என இரு தரப்பினரும் மாறிமாறி காரசாரமாக பேசினர். இரு தரப்பினரின் கருத்துகளையும் குறிப்பெடுத்துக் கொண்ட அதிகாரிகள், 'இது குறித்து, அறிக்கை தயாரிக்கப்பட்டு, கலெக்டருக்கு அனுப்பப்படும்,' என்றனர்.
நீர் நிலைகள் காணாமல் போகும்!
முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்): கல்குவாரிகளுக்கு மட்டும் சட்டவிரோதமாக எங்கிருந்தோ வெடி மருந்துகள் வருகின்றன. இதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வெடி மருந்துகள் சட்டவிரோதமாக எவ்வாறு வருகின்றன என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும். அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள், உயர்மின் கோபுரம், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை மறைத்து கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் அவசியம் என்ன? எனவே, விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால், கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
செல்லமுத்து (தமிழக விவசாயிகள் சங்கம்): எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும், அது விவசாயிகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு, விவசாயத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கல்குவாரிகள் இயங்கக்கூடாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு குவாரிகள் செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தவறுகள் நடக்காமல் திருத்திக் கொள்வது மனித இயல்பு. தவறுகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம், விதிமுறை மீறாமல் கல்குவாரிகள் இயங்குவதை உறுதி செய்யலாம்.
விஜயகுமார் (கோடங்கிபாளையம்): கல்குவாரிகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சட்டப்படி செயல்பட வேண்டும் என்று தான் கூறுகிறோம். ஒரு குவாரிக்கு ஒரு இடத்தில் கூட்டம் நடத்தலாம். இப்படி, ஏழு குவாரிகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது எப்படி சரியானதாக இருக்கும். விளை நிலங்கள், நீர்நிலைகளை மறைத்து குவாரி அமைக்க வேண்டிய அவசியம் என்ன? குவாரிகளில், சட்டவிரோதமாக வெடி வைப்பதன் மூலம் நிலத்தடி நீரோட்டம் மாறுகிறது. ஆவணங்களை மறைத்து முறைகேடாக செயல்படும் கல்குவாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
கனிம வளம் எப்படி கிடைக்கும்?
விஜயகுமார் (பசுமை சூழல் அமைப்பு): மண்ணுக்கு மாற்றாக எம் - சாண்ட், பி - சாண்ட் கட்டாயம் தேவை. கல்குவாரி தொழிலுக்கு அனுமதி வழங்காவிட்டால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். கல்குவாரி உரிமத்தை ரத்து செய்வது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். எனவே, விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய கல்குவாரிகளுக்கு நிச்சயம் அனுமதி வழங்க வேண்டும்.
கார்த்திகேயன் (சங்கோதிபாளையம்): தொழில்கள் நன்றாக நடந்தால் தான், அரசும் மக்களும் நன்றாக இருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட தொழில்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடக்க வேண்டும். அதிவேக லாரிகள், ஜல்லிகள் ரோட்டில் இறைத்து செல்வது உள்ளிட்ட விதிமுறைகளை தவிர்க்க வேண்டும். அனைவரும்தான் சாலையை பயன்படுத்துகிறோம். இவ்வாறு, சாலையை பயன்படுத்தும் நாம், அதற்கான மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் கல்குவாரிகளை வேண்டாம் என்று கூறுவது சரியாக இருக்காது.
பழனிசாமி (ஊராட்சி முன்னாள் தலைவர், கோடங்கிபாளையம்): கல்குவாரி தொழில் அபாயகரமானது என்பதால், இதில் நெறிமுறைகளை பின்பற்றியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. வீடுகள், சாலை, அலுவலகம், மருத்துவமனை என, அனைத்துக்கும் கனிம வளங்கள் தேவை என்பதால், இது காலத்தின் கட்டாயம். தேவைகளை நிறைவேற்ற கனிம வளங்கள் எடுத்துதான் ஆக வேண்டும். ஏற்கனவே கல்குவாரிகள் உள்ள இடத்தை விட்டுவிட்டு, வேறு இடத்துக்குச் சென்றால், அங்கும் எதிர்ப்பு கிளம்பும். எங்கு சென்றாலும் எதிர்ப்பு என்றால், கனிம வளங்கள் எப்படி கிடைக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.