/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 31ம் தேதி கொப்பரை ஏலம் இல்லை
/
வரும் 31ம் தேதி கொப்பரை ஏலம் இல்லை
ADDED : அக் 28, 2024 11:46 PM
உடுமலை : உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வரும் 31ம் தேதி கொப்பரை ஏலம் இருக்காது, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வாரம்தோறும் வியாழக்கிழமைகளில், இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. வரும், 31ம் தேதி, தீபாவளி பண்டிகை அரசு விடுமுறை காரணமாக, கொப்பரை ஏலம் இருக்காது. வரும், நவ.,7 ம் தேதி முதல், வழக்கம் போல் கொப்பரை ஏலம் நடக்கும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்பரையை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இருப்பு வைத்து, ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு, தெரிவித்தார்.