/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மூன்றாவது கண்'; போலீசார் வேகம்
/
'மூன்றாவது கண்'; போலீசார் வேகம்
ADDED : ஏப் 26, 2025 11:38 PM

பல்லடம்: எந்த ஒரு குற்ற சம்பவம் என்றாலும், 'சிசிடிவி' பதிவுகளை வைத்தே பெரும் பாலும் போலீசார் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கின்ற னர். பல்லடம் நகரப் பகுதியில், 260 'சிசிடிவி', கேமராக்களை பொருத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், 60 'சிசிடிவி' கேமராக்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில், 'சிசிடிவி' கேமராக்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., பங்களிப்புத் தொகையை பயன்படுத்தி, மேலும், 260 கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. ஒட்டுமொத்த கட்டுப்பாடும், போலீஸ் ஸ்டேஷன் வசம் இருக்கும்.
இதனால், குற்ற சம்பவங்களை தடுக்கவும், எளிதில் குற்றவாளிகளை கைது செய்யவும் முடியும். தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கம்பங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

