/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
/
மாணவர்களுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவர்களுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவர்களுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ADDED : அக் 04, 2024 11:47 PM
திருப்பூர், நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டனில், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2006ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. பள்ளியில், 2,200 மாணவர்கள் பயில்கின்றனர். 180க்கும் அதிகமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி போதிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் தொடர்ந்து, நுாறு சதவீதம் தேர்ச்சியை இப்பள்ளி தக்க வைத்து வருகிறது. படிப்பை போல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தருவதால், இப்பள்ளி மாணவர்கள், குறுமைய போட்டி துவங்கி, மண்டல, மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் சாதிக்கின்றனர்.
தனிநபர், குழு விளையாட்டு போட்டிகளில் சாதிப்பவர் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
சதுரங்க போட்டியில் மாநில, தேசிய போட்டிக்கு தேர்வாகி இப்பள்ளி மாணவர்கள் சாதித்துள்ளனர்.
அனைத்து போட்டிகளுக்குமான விரிவான மைதான வசதி, விரிவுபடுத்தப்பட்ட நுாலகம், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் பள்ளிகளில் உள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு, எல்.கே.ஜி., முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அட்மிஷன் நடக்கிறது.
பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து, பள்ளி தாளாளர்சுதா மோகன் கூறியதாவது:
ஒழுக்கமான மாணவர் உருவாகும் போது தான், சிறந்த தலைமுறையும், நேர்மையான சமுதாயமும் உருவாகும். அதற்கு வழிகாட்டு வதையே எங்கள் பள்ளியின் தலையாய நோக்கமாக கொண்டுள்ளோம். குறைந்த கட்டணத்தில், சிறந்த கல்வியை தர முயற்சிக்கிறோம்.
நாங்கள் முதலில் ஒழுக்கத்தை கற்றுத்தருகிறோம். அதன்பின் தான் படிப்பு, விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவோம். மனவளக்கலை மூலம் யோகா கற்றுத் தருகிறோம்.
கராத்தே, சிலம்பம், ஸ்போக்கன் இங்கிலீஸ் மற்றும் ஒன்பதாம் வகுப்பு 'யோகமும் வளமும்' எனும் தலைப்பில் 'டிப்ளமோ' படிப்பு கற்றுத்தரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.