/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
6 நிமிடத்தில் திருப்பாவை; சாதித்துக்காட்டிய 'பாவை'
/
6 நிமிடத்தில் திருப்பாவை; சாதித்துக்காட்டிய 'பாவை'
6 நிமிடத்தில் திருப்பாவை; சாதித்துக்காட்டிய 'பாவை'
6 நிமிடத்தில் திருப்பாவை; சாதித்துக்காட்டிய 'பாவை'
ADDED : டிச 28, 2025 07:10 AM

பல்லடம் அடுத்த, காரணம்பேட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ், 45; கோவில் அர்ச்சகர்; இவரது மனைவி கீதா. இவர்களது மகள் மித்ரா, 9. அருகிலுள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர், 240 வரிகள் கொண்ட, 30 திருப்பாவை பாசுரங்களை, 6 நிமிடங்களில் பாடி சாதனை படைத்துள்ளார்.
மோகன்ராஜ் கூறியதாவது:
கோவிலில், மார்கழி மாதம், திருப்பாவை பாசுரங்கள் பாடுவது வழக்கம். எங்களுடன் சேர்ந்து மித்ராவும் திருப்பாவை பாட துவங்கினாள். நாளடைவில், பாசுரங்கள் மித்ராவுக்கு சரளமாக வந்தன. இரண்டு ஆண்டாக தொடர்ந்து இதை பயிற்சி செய்து வந்தார். இதை ஏன் சாதனையாக செய்யக்கூடாது என்று கருதினோம்.
பெங்களூருவில் உள்ள, 15 வயது சிறுமி ஒருவர், 5 நிமிடத்தில் திருப்பாவை பாசுரம் பாடி சாதனை செய்துள்ளதாக அறிந்தோம். அதேபோல், மித்ராவும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு ஆண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார். அவ்வகையில், 9 வயது பிரிவில், 30 பாசுரங்களை, 6 நிமிடம் 13 வினாடிகளில் பாடி,புதிய சாதனையை நிகழ்த்தினார்.
இதை 'கலாம் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் பதிவு செய்து, அதற்கான சான்று மற்றும் விருதை வழங்கியுள்ளது. பரத நாட்டியம் கற்று வரும் மித்ரா, திருப்பாவை பாடி சாதனை நிகழ்த்தியது பெருமையாக உள்ளது.
இது சாதனையாக மட்டும் கருத வேண்டியதில்லை. குழந்தைகளுக்கு திருப்பாவையை கற்றுக் கொடுப்பது என்பது நல்ல பழக்க வழக்கம்.

