/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் குவிந்தனர்
/
திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் குவிந்தனர்
ADDED : செப் 29, 2025 12:18 AM

பொங்கலுார்; கொடுவாய் சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா நடந்தது.
முன்னதாக காலை, 7:00 மணிக்கு கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அங்கு சிவனடியார்கள் வழிபாடு செய்த பின், சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் திருக்கழுக்குன்றம் தாமோதரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் விழா துவங்கியது. திருவாசகத்தை ஓதினால் கருங்கல் மனதும் கரைந்து உருகும் என்பதற்கு ஏற்ப சிவனடியார்கள் திருவாசகத்தை குழுவாக இணைந்து மனமுருக பாடினர்.
தாராபுரம் வரன் பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் மவுன சிவாச்சல அடிகளார், காமாட்சிபுரம் ஆதினம் தம்புரான் சுவாமிகள், கோவை சிவ கார்த்திகேயன் சுவாமிகள், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமு, நாகேஸ்வர சுவாமி அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.