ADDED : அக் 31, 2026 09:24 PM

பல்லடம்: பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சி கிறிஸ்துராஜபுரத்தை சேர்ந்தவர் சங்கரீஸ்வரி, 50. கணவர் இறப்புக்கு பின் ரேஷன் கார்டு திருத்தியபோது இவரது பெயரும், மகன் பத்மேஸ்வரன் பெயரும் நீக்கப்பட்டது. இருவரின் ஆதார் எண்களும் முடங்கின.
இதனால் மகனின் கல்லுாரி படிப்பும் பாதித்தது. மூன்றரை ஆண்டாக வி.ஏ.ஓ., தாலுகா அலுவலகம், ஆதார் மையம், கலெக்டர் அலுவலகம் என ஏறி இறங்கியும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தன்னார்வலர் மணிகண்டன் மூலம் பல்லடம் எம்.எல்.ஏ. ராம்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. எம்.எல்.ஏ. முயற்சியால் சங்கரீஸ்வரியின் ஆதார் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. மூன்றரை ஆண்டுக்கு பின் முதல் முறையாக ரேஷன் பொருட்கள் வாங்கினார்.
இது குறித்து சங்கரீஸ்வரி கூறுகையில், ‘‘மூன்றரை ஆண்டு போராட்டத்துக்கு பின் தீர்வு கிடைத்துள்ளது; மகனின் ஆதார் அ்டடையையும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்’’ என்றார். ஆம்... இதுதான் பெண்ணுக்கு நிஜத் தீபாவளி.
கால் செருப்பு தேய ஏறி இறங்கிய அலுவலகங்கள்... மூன்றரை ஆண்டுக்கு பின் கையில் கிடைத்த ரேஷன் பொருட்கள் - மகிழ்ச்சியில் சங்கரீஸ்வரி.
