/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் பேனர்கள்! அகற்ற நடவடிக்கை தேவை
/
ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் பேனர்கள்! அகற்ற நடவடிக்கை தேவை
ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் பேனர்கள்! அகற்ற நடவடிக்கை தேவை
ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் பேனர்கள்! அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : மே 26, 2025 11:05 PM

உடுமலை, ; தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும், பிளக்ஸ் பேனர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, குடிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள, கொங்கல்நகரம், பெதப்பம்பட்டி மற்றும் குடிமங்கலம் நால்ரோடுகளில், அதிகளவு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறது.
அரசியல் கட்சியினர் மற்றும் இதர நபர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக, இத்தகைய பிளக்ஸ் பேனர்களை வைக்கின்றனர். இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள், பல மாதங்களுக்கு அகற்றப்படுவதில்லை.
காற்று மற்றும் மழைக்காலங்களில், பேனர்கள் கிழிந்து ரோட்டோரத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில், அதன் கம்பிகளும் தொங்குகின்றன.
நேற்று முன்தினம் பெதப்பம்பட்டி சுற்றுப்பகுதியில், பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த, 20க்கும் மேற்பட்ட பேனர்கள், காற்றின் வேகத்துக்கு தாங்காமல் சாய்ந்தன.
இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வகையில் வைக்கப்படும் பேனர்களை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் குடிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.