/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் பயணியிடம் அத்துமீறல்: டிக்கெட் பரிசோதகர் கைது
/
பெண் பயணியிடம் அத்துமீறல்: டிக்கெட் பரிசோதகர் கைது
பெண் பயணியிடம் அத்துமீறல்: டிக்கெட் பரிசோதகர் கைது
பெண் பயணியிடம் அத்துமீறல்: டிக்கெட் பரிசோதகர் கைது
ADDED : ஜூலை 07, 2025 12:54 AM
திருப்பூர்; திருப்பூரில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் அத்துமீறிய டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்தவர், 34 வயது பெண். கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம், மங்களூரு வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூர் செல்வதற்காக, தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் நிலையத்தில், முன் பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்து காத்திருந்தார்.
ரயிலில் ஏற முயன்ற போது, எதிர்பாராத விதமாக ரயில் கிளம்பியது. உடனே, ஏ.சி., பெட்டியில் ஏறினார்.
அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் வேலுார், புளியமங்கலத்தை சேர்ந்த பாரதி, 50, இளம்பெண்ணை சீட்டில் அமர வைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
திருப்பூரில் இறங்கிய அப்பெண், திருப்பூர் ரயில்வே போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, பாரதி நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.