/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலையில் மகா சிவராத்திரி விழா; மூலாலய கோபுரமாகும் திருச்சப்பரம்
/
திருமூர்த்திமலையில் மகா சிவராத்திரி விழா; மூலாலய கோபுரமாகும் திருச்சப்பரம்
திருமூர்த்திமலையில் மகா சிவராத்திரி விழா; மூலாலய கோபுரமாகும் திருச்சப்பரம்
திருமூர்த்திமலையில் மகா சிவராத்திரி விழா; மூலாலய கோபுரமாகும் திருச்சப்பரம்
ADDED : மார் 02, 2024 11:03 PM
உடுமலை;உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வரும், 8ம் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது.
உடுமலை, திருமூர்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலை மேல் பஞ்சலிங்கம், அருவி, மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் என ஆன்மீக சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.
இக்கோவிலில், சிறப்பு அம்சமாக, சிவராத்தியன்று, மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமாக, கிராம மக்கள், மலைவாழ் மக்கள் கொண்டு வரும் திருச்சம்பரம் நிறுவப்படுவது பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு, மகா சிவராத்திரி திருவிழா வரும், 8ம் தேதி நடக்கிறது. பூலாங்கிணர் கிராமத்தில் திருச்சப்பரம் உருவாக்கப்பட்டு, 7ம் தேதி, 8:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
கிராமங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, 8ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, திருச்சப்பரம் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, முதற்கால யாக பூஜையும், 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, 9ம் தேதி, அதிகாலை, 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனை நடக்கிறது. மகா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

