/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் குமரன் நினைவு நாள் அமைப்பினர் மரியாதை
/
திருப்பூர் குமரன் நினைவு நாள் அமைப்பினர் மரியாதை
ADDED : ஜன 12, 2025 02:13 AM

திருப்பூர்: கொடி காத்த குமரன் நினைவு நாள் முன்னிட்டு, திருப்பூரில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் குமரன் ரோட்டில் தாலுகா அலுவலகம் எதிரே அமைந்துள்ள குமரன் நினைவு ஸ்துாபி மற்றும் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் உள்ள குமரன் நினைவிடத்திலும் நேற்று பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் சுதந்திர போராட்ட தியாகிகள் சமிதி சார்பில் நினைவு துாணுக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. எம்.பி., சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் பங்கேற்றனர். அமைப்பு நிர்வாகிகள் நடராஜன் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர், திருப்பூர் குமரன் வாரிசுகள் சிவானந்தம், நிர்மல்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட செங்குந்தர் சங்க செயலாளர் குருநாதன் தலைமையில் சங்கத்தினர் கலந்து கொண்டனர். சமுதாய பொருளாதார தொண்டு மன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.ம.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி, மாநில துணை பொது செயலாளர் சண்முகவேலு மற்றும் கட்சியினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்களும் குமரன் சிலை மற்றும் நினைவு ஸ்துாபிக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.