/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
/
திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
ADDED : ஜூலை 08, 2025 11:52 PM
திருப்பூர்; திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின், 2025 - 26ம் ஆண்டுக்கான தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை (10ம் தேதி) மாலை 6:30 மணிக்கு, திருப்பூர் அருகே மங்கலத்தில் உள்ள மேற்கு ரோட்டரி மஹாலில் நடக்கிறது.
சங்கத்தின் தலைவராக ஆறுமுகன், செயலாளர் சிவகுமார், பொருளாளராக செந்தில்பிரபு மற்றும் ஆட்சி மன்றக்குழுவினர் பதவியேற்கின்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் திருக்குமரன் பங்கேற்று பேசுகிறார்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாஷ், லோகநாதன், குமார செந்தில் ராஜா, சண்முகசுந்தரம், சுவாமி ஈஸ்வரன், நடராஜன், அமிர்தம் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ரோட்டரி தலைவர் பாலசுப்ரமணியம், செயலாளர் கார்த்திக் குமார், பொருளாளர் சிவகுமார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.